இக்பால் அலி-
இன்று எமது மாணவச் செல்வங்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகிக் காணப்படுகின்றனர். துரதிருஷடவசமாக ஒரு கெட்ட காலகட்டத்தில் நாங்கள் இருந்து கொண்டிருக்கிறோம். விசேடமாக கண்டி நகரிலுள்ள கவர்ச்சிகரமான பாடசாலையிலுள்ள சில மாணவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர். எமது முஸ்லிம் பாடசாலைகளில் ஏற்படாத வண்ணம் நாங்கள் எல்லோரும் அவதானத்துடன் இருத்தல் வேண்டும். அத்துடன் அவ்வாறான நிலையிலிருந்து எமது மாணவச் செல்வங்களைப் பாதுகாப்பதற்கு சகல பாடசாலை மட்டங்களில் விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் அவசியமாகும். இதற்கு நாங்கள் எல்லோரும் முன்வருதல் வேண்டும் என்று நான் வினயமாக வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று முஸ்லிம் சமய காலாசரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் தெரிவித்தார்.
கெலிஓய நியூ எல்பிட்டிய அஸ்ஸம்ஸ் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் சான்றோர் கௌரவிப்பும் பாடசாலை மண்டபத்தில் அதிபர் பௌசுல் அமீன் தலைமையில் 23-05-2015 நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்த கொண்ட முஸ்லிம் சமய காலாசரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் அங்கு இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்;
கடந்த காலத்தில் அமைச்சர் எம். எச். எம். முஹமட் அவர்களுக்கு பின் வந்த காலங்களில் முஸ்லிம் கலாசார அமைச்சு ஒன்று வழங்கப்பட வில்லை. எமக்கென்று அமைச்சு இல்லாத காரணத்தினால் கடந்த காலத்தில் பல இன்னல்களை அனுபவித்தோம். எமது பள்ளிவாசல்களின் பதிவு சரியான முறையில் நடைபெறவில்லை .அவற்றைச் சரியான முறையில் இனங்கண்டு எந்தவிதமான தீர்வினையும் வக்கு சபை பெற்றுக் கொடுக்க வில்லை. ஹஜ் கடமையை எடுத்துக் கொண்டால் ஏனைய மக்கள் எம்மைப் பார்த்துச் சிரிக்குமளவுக்கே சில விடயங்கள் இருந்தன. விசேடமாக பண மோசடிகள் கடந்த காலங்களிலே இடம்பெற்றதாக நாங்கள் ஊடகவாயிலாக அறிந்தோம். எமது பள்ளிவாசல்கள் அடித்து உடைக்கப்பட்டன. இந்த நாட்டிலே நாங்கள் அஞ்சி வாழக் கூடிய ஒரு நிலமை இருந்தது. எமது சமய விடயங்களை நடத்த முடியாமல்; இருந்தன. புதிய அரசாங்கத்தின் நல்லாட்சியின் மூலம் எல்லாயின மக்களையும் கௌரவப்படுத்தும் வகையிலே எமக்கென ஒரு தனியான அமைச்சைத் தந்திருப்பதையிட்டு நாங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்க நன்றி கூற வேண்டும்.
இந்த அமைச்சின் மூலம் தற்போது பள்ளிவாசல்களை துரித கதியில் பதிவு செய்யுமாறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். வக்கு சபையினருக்கு சம்பள அதிகரிப்பினை வழங்கி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அத்தோடு இனங்களுக்கிடையே நல்லுறவை வளர்ப்பது தொடர்பாக ஆலோசனையை முன் வைத்து நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம். குறைந்த செலவில் ஹஜ் செல்வதற்கு வழிகை செய்து கொடுக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. ஆனால் அதற்கான கால அவசம் போதாமையிட்டு நான் கவலையடைகின்றேன் கடந்த ஆண்டை விட மேலதிகமாக இம்முறை 600 பேர் ஹஜ் செல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதேபோல அடுத்து வருடம் 5000 பேர் செல்வதற்கான இணக்கபாடும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று சவூதி நாட்டிலுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இந்த நாட்டினுடைய அபிவிருத்திற்காகவும் முஸ்லிம்களுயடைய நல மேம்பாட்டுக்காகவும் பல உதவிகளைச் செய்வதற்குத் தயராகவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாடசாலைக்கு சேவையாற்றிய முன்னாள் அதிபர் அல்ஹாஜ் எம் சீP. எம். ஜவ்பர் மற்றும் தொண்டர் அல்ஹாஜ் எச். எம். நிலார் ஆகியோiரைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் இங்கு விசேட அம்சமாக இடம்பெற்றது.