இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகம் தொண்டமான் நேற்று (23) புஸ்ஸல்லாவ மேல்போர்ட் தோட்டத்தில் மக்கள் சந்திப்பொன்றை மேற்கொண்டார்.
தோட்ட தொழிலாளர்களின் வேதனம் குறித்து முதலாளிமார் சம்மேளனத்துடன் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக தோட்ட தொழிலாளர்களின் கருத்துக்களை தெரிந்து கொள்ளும் முகமாக இந்த சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது தேயிலை பறித்து எமது நாட்டிற்கு முதலீட்டை தேடிதரும் பெண் தொழிலாளர்களின் உளமறிந்து அவர்களுக்கான தீர்வு மிக விரைவில் கொடுக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
இதுதவிர தோட்ட நிறுவனங்கள் கூட்டு ஒப்பந்தத்திற்கு இணங்காத பட்சத்தில் மாதத்தில் 15 தினங்களின் உற்பத்தி வருமானத்தினை தோட்ட நிறுவனத்திற்கும் எஞ்சிய 15 தினங்களின் உற்பத்தி வருமானத்தினை தோட்ட தொழிலாளர்கள் பெரும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆறுமுகன் தொண்டமான் மேலும் குறிப்பிட்டார்.
இச் சந்திப்பின்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம், மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.ரமேஷ் என பலரும் கலந்து கொண்டனர்.