இக்பால் அலி-
அண்மைக்காலமாக இந்த நாட்டில் இனவாதம் தலைதூக்கியிருக்கிறது. எந்தளவுக்கு என்றால் எங்களுடைய சொந்த பூமியான கரடிக்குழி, மறிச்சிக்கட்டி, பாலைக்குழி, பெரியமடு ஆகிய கிராமங்களில் காடுகளை அழித்து குடியேறுவதற்குக் கூட நாங்கள் பௌத்த சமயக் கோட்பாட்டுக்கு அநியாயமிழைக்கின்ற ஒரு சமூகமாக இந்தநாட்டில் இருக்கின்ற 90 விகிதமான சிங்கள மக்கள் மத்தியிலே காட்டுகின்ற வகையில் இலங்கையில் இருக்கின்ற சிங்கள ஊடகங்கள் திட்டமிட்டு சதி செய்து கொண்டிருக்கிறது. அவைமட்டுமல்ல இந்தப் பிரதேசங்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒரு காட்டுப் பிரதேசமாக கெசட் பண்ணப்பட்டுள்ளது. இதில் சோந்தக் காணியைக் கூட கெசட் பண்ணப்பட்டுள்ளது என்று வர்த்தக வாணிபம் மற்றும் கைத்தொழில் துறை அமைச்சர்ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவினால் நிர்மாணிக்கப்பட்ட வவுனியா காக்கையன் குளம் ஜும்ஆப் பள்ளிவாசல் திறப்புவிழா 22-05-2015 நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமஅதிதியாககலந்துகொண்டஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுச் தலைவர் அஷஷய்க் என். பீ. எம். அபூபக்கர் சித்தீக் மதனி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். இங்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அமைச்சர் ரிசாட் பதியுதீன் அங்கு இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்;
ஒருகொட்டிலைக் கட்டுவது என்பதுடைய கஷடம் எனக்குத் தெரியும். ஒரு இலட்சம் சேர்ப்பது என்பது மிகக் கஷடமான காரியம். மிகவும் பிரமாண்டமான முறையில் மிகவும் அழகாகக் கட்டப்பட்டுள்ளது.
நாங்கள் அல்லாஹ்வுக்கு நெருங்கிய சமூகமாக நாங்கள் வாழவேண்டும். எங்களுக்கு எதிராக எழுந்திருக்கின்ற சாவல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.
அதேபோல வீடுகளையும் கட்டிபாதைகளையும் அமைத்துதான் கொடுத்திருப்பதாகவும் ஆனால் வீடுகளெல்லாம் வெறுமனே மூடிக்கிடப்பதாக என்னைப் பார்த்து ஏசிகின்றார்கள்.
எமது சமூகத்திற்கு எதிராகப் பயன்படுத்துகிறார்கள். இப்பிரதேசத்தில் நான் பெற்றுத் தந்த 500 ஏக்கர்காணிகளையும் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள் இல்லையென்றால் பெரிய மடுக்காணியை நிறுத்தி விட்டார்கள். மறிச்சிக்கட்டிக் காணிக்கு எதிராகசட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே எதையும் தாமதப்படுத்தாமல் செய்து கொள்ளுங்கள்.
எங்களுடைய உரிமையை விட்டுக் கொடுக்கின்ற கோழைகளாக நாங்கள் இருக்கத் தேவையில்லை.
உங்களுடைய பணி கட்டிய வீட்டை மூடி வைக்காமல் இருக்கப் பாருங்கள். தந்த காணியை சும்மா வைக்காமல் அதைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுங்கள்.
உங்களுடைய மார்க்கத்தை கட்டி எழுப்புதவற்கு ஆக்கபூர்வமான பணிகளைச் செய்யுங்கள் என்றுஅமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மார்க்கச் சொற்பொழிவும் இடம்பெற்றது இதில் காலாநிதி அஷஷய்க் அம்ஜத் ராசிக், அஷஷய்க் எஸ். எச். எம். இஸ்மாயீல் ஆகியவர்களுடன் இந்நிறுவனத்தின் பொதுச் செயலாளர் ஏ. எல் கலிலுர்ரஹ்மான் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.