அபூ-இன்சாப்-
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை 6ஆம் கிராம சேவகர் பிரிவிலுள்ள மௌலவி சீ.பீ. முகைதீன்பாவா என்பவரின் பாவிக்கப்படாத வீட்டு முற்றத்திலிருந்து நேற்று (23) காலை கைக் குண்டொன்று கண்டுபிடிக்கப்படடுள்ளன.
தமது வீட்டு வளவை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையிலே இக் கைக்குண்ட கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக சம்மாந்துறைப் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததற்கு அமைவாக அக்குண்டை செயலிளக்கச் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற் கொண்டனர்.
இதற்கு அமைவாக இன்று (24) காலை 10.30 மணியளவில் அம்பாறை பீ.ரீ.எஸ் விஷேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த விஷேட குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவுக்குப் பொறுப்பான உதவிப் பரீசோதகர் ஆர்.எம்.சீ.ரத்னாயக்கா தலைமையிலான உதவிப் பரீசோதகர் டபிள்யூ.ஏ.கே.ஆர்.தர்சன, பீ.சீ.ஹேரத் மற்றும் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் சர்ஜன்ட்களான எஸ்.எம்.நூர்தீன், கே.எம்.அமரசூரிய ஆகிய குழுவினரால் அக்கைக்குண்டு எடுத்துச் செல்லப்பட்டு காரைதீவு கடற்கரைப் பிரதேசத்தில் செயலிழக்கச் செய்யப்பட்டன.
இது விடயம் தொடர்பான விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.