விரைவில் பொன்சேகாவின் கட்சி உள்ளிட்ட பலர் ஐ.ம.சு.கூ.வில்!

விரைவில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மேலும் சில கட்சிகள் இணையத் தயாராகவுள்ளதாக வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி விரைவில் கூட்டமைப்புடன் இணையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணையவுள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர மேலும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -