இன்று தலைமைச் செயலகம் வரும் ஜெயலலிதா!

ந்தாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு, முதன் முறையாக ஜெயலலிதா இன்று தலைமை செயலகத்துக்கு வருகிறார். 

அம்மா உணவகம், அம்மா மருந்தகம் உள்பட பல புதிய திட்டங்களை தொடங்கிவைக்கிறார். 

முதலமைச்சராக ஜெயலலிதா 5-வது முறையாக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு ஆளுனர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 

முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதன் முறையாக தலைமை செயலகத்துக்கு ஜெயலலிதா இன்று வருகை தரவுள்ளார். இன்று பிற்பகல் 03.00 மணிய அளவில் வரும் அவரை வரவேற்கும் வகையில் தலைமை செயலகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் அறையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 

தலைமை செயலகத்துக்கு இன்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, முதல் நாளிலேயே மக்களால் பெரும் வரவேற்புக்கு உள்ளான திட்டங்களான மேலும் பல அம்மா உணவகங்கள், அம்மா மருந்தகங்களை திறந்துவைக்கிறார். 

அந்த வகையில், சென்னையில் 45 உணவகங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 120 அம்மா உணவகங்கள், 5 அம்மா மருந்தகங்களை அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைப்பதாக கூறப்படுகிறது. 

காவல் துறைக்கு ரூ.449 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களை திறந்துவைத்து, வாகனங்கள், நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். ரூ.6 கோடியே 80 இலட்சம் செலவில் சென்னை எழும்பூரில் உள்ள பழைய பொலிஸ் கமிஷனர் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சீருடை பணியாளர் தேர்வு வாரியத்துக்கான 4 மாடிக்கட்டிடம், சென்னை மதுரவாயல், மடிப்பாக்கம் உள்பட தமிழ்நாடு முழுவதும் 68 போலீஸ் நிலையங்களுக்கான புதிய கட்டிடங்கள், 4 ஆயிரம் பொலிஸ் குடியிருப்புகளை திறந்துவைக்கிறார். 

இதுமட்டுமல்லாமல், புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு அரங்கங்கள் உள்பட பல புதிய கட்டிடங்கள், நலத்திட்ட உதவிகளை தொடங்கிவைத்து, தன் அலுவலக பணியை மேற்கொள்கிறார்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -