சுஐப் எம். காசிம்,அஸ்ரப் ஏ சமத்-
இலங்கையில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் நாட்டின் தேசியச் சொத்துகளை அழியாமலும் சிதையாமலும் பாதுகாக்கக் கடமைப்பட்டவர்கள்.
தேசியச் சொத்துக்கள் ஓரினத்துக்கு மட்டும் உரியவை அல்ல. அனைவருக்குமே சொந்தமானவை. சொத்துக்களில் உரிமை இருப்பது போல அவற்றை பாதுகாக்கும் கடமையும் சகலருக்கும் உண்டு.
வில்பத்து வனம் ஒரு தேசியச் சொத்து. இந்த வனத்தின் அருகாமையில் அமைந்த கிராமங்களில் வாழ்ந்த முஸ்லிம்களே இடப்பெயர்வுக்கு முன்னர் வனத்தைப் பாதுகாத்து வந்தார்கள் என்பது வரலாறு. வில்பத்துவை அண்மித்த கிராமத்து முஸ்லிம்கள் 90 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்றார்கள். இடப்பெயர்வு நீடித்ததால் இம்மக்கள் வாழ்ந்த கிராமங்களும் காடாகி விட்டன.
2009 ஆம் ஆண்டு யுத்த முடிவின் பின் வடபுல முஸ்லிம்கள் தம் சொந்தக் கிராமங்களில் மீள்குடியேறி வருகின்றனர்.
கிராமங்களில் உள்ள காடுகளை அகற்றியும் வயல்களைத் திருத்தியும் இம் மக்கள் குடியேற்றத்தை மேற்கொண்டு வருகிறார்கள். வில்பத்துவின் எல்லைக்கு வெளியே தமது சொந்த நிலத்தில் குடியேறி வரும் மக்களைத் தவறாகப் புரிந்து கொண்டு பெரும்பான்மை இனக் கடும்போக்காளர்கள், வில்பத்துவை முஸ்லிம்கள் அழித்துக் குடியேறுவதாகப் பொய்யான வதந்தியைப் பரப்பி வருகிறார்கள். இந்த மக்கள் தமது சொந்தக் கிராமத்தில் குடியேற வன்னி மாவட்ட எம்.பி. என்ற வகையில் அமைச்சர் றிசாட், இவர்களுக்குத் தேவையான நிதி மற்றும் உதவிகளைச் செய்து வருகிறார்.
அமைச்சர் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்களும் கடும்போக்காளர்களும் அமைச்சர் றிசாட் வில்பத்துவில் பாகிஸ்தான் மக்களைக் குடியேற்றுவதாக வீண் புரளிகளையும் கட்டுக்கதைகளையும் பரப்பி வருகின்றனர். இந்த இனத்துவேஷக் கூச்சலிலே எந்தவித உண்மையும் இல்லை என்பதை வில்பத்து செல்பவர்கள் புரிந்து கொள்வர். புரிந்தும் உள்ளனர்.
வில்பத்து வனத்தைச் சுற்றிவரக் காவலாளிகளும் இராணுவமும் கடமையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்குத் தெரியாமல் எப்படி வனப்பிரதேசத்தில் காணி பிடிக்க முடியும் என்பதைச் சிந்தித்தால் உண்மை விளங்கும்.
மேலும் மீள்குடியேறியுள்ள மக்களின் காணிகளுக்கான உறுதிகள் 1800, 1900 ஆம் ஆண்டுகளில் காணி பெறப்பட்டுள்ளதெனச் சான்று பகர்கின்றன. உறுதிக் காணிகள், கால் நூற்றாண்டு காலத்தில் காடாகிவிட்டதால் வில்பத்து வனத்துக்குரியது என்று குற்றசஞ்சாட்டுகின்றனர்.
அமைச்சர் முசலிப் பிரதேச மக்களுக்கான காணிக் குடியேற்றத்தில் தன்னிச்சையாகச் செயல்படவில்லை. மன்னார் அரச அதிபர், முசலிப் பிரதேச செயலாளர் ஆகியோரின் அங்கீகாரத்துடனேயே மீள்குடியேற்றம் நடைபெற்றது. காணியற்றோருக்கு வில்பத்து வனத்திலிருந்து நீண்ட தொலைவில் வன பரிபாலன இலாக்காவின் அனுமதியுடன் காணிகள் இவற்றைத் திரிபுபடுத்தி அமைச்சர் றிசாட் மீது சேறு பூசுவது மீள்குடியேறும் மக்கள் அனைவரையும் நிந்திப்பதாகவும் வேதனை செய்வதாகவும் அமைந்துள்ளது.
எந்தப் பாவமும் அறியாத வடபுல முஸ்லிம்களை மனித நீதிக்கு மாறாக புலிகள் தண்டித்தனர். அவர்களது தண்டனையின் ரணங்களால் கால் நூற்றாண்டு காலம் இடம்பெயர்ந்தவர்கள் துன்புற்றனர்.
சொந்த வீடிழந்து தொழில்துறை இழந்து சுயாதீனமான வாழ்விழந்து இம்மக்கள் வேதனையை அனுபவித்தனர். 75 ஆயிரம் சீவன்கள் அநியாயமாக விரட்டப்பட்டதை, கலைக்கப்பட்டதை, ஊடகங்கள் கண்டிக்கவில்லை, புலிகளுக்குப் பயந்து மௌனம் காத்தனர்.
தென்னிலங்கையிலே பல்வேறு கஸ்டங்களை அனுபவித்த இம்மக்களுக்கு உதவி நல்குமாறு கூட எந்த ஊடகமும் வேண்டுகோள் விடுக்கவில்லை. அண்மைக் காலங்களிலே புயல், வெள்ளப் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு ஊடக நிறுவனங்கள் முன்னின்று நிதி திரட்டிக் கொடுப்பதைக் காண்கிறோம். இவ்வாறு எந்த ஓர் ஊடக நிறுவனமோ அல்லது சமூக நல நிறுவனங்களோ நிதி திரட்டி இடம்பெயர்ந்த அபலைகளுக்கு உதவியதாக இல்லை. ஆனால் இந்த வகையான ஊடகங்கள் இன்று பெரும்பான்மைக் கடும்போக்காளரின் கூச்சலுக்கு செவிமடுத்து உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பிரசுரிக்கின்றன.
அமைச்சர ரிசாட்டின் வேண்டுகோளுக்கிணங்க வில்பத்துவைத் தரிசித்து வந்தவர்கள் பலர் வில்பத்து பிடிக்கப்பட்டதான கூச்சலிலே எந்தவித உண்மையும் இல்லை என்பதை ஏற்றக் கொண்டுள்ளனர். எனினும் பரபரப்பான செய்தி மூலம் விற்பனையை அதிகரிக்க வில்பத்துவைப் பேசு பொருளாக்கிச் சில ஊடகங்கள் வேதனைக்குரிய செய்திகளை வெளியிடுவதை இடம்பெயர்ந்த வடபுல மக்களுக்கும் வன்னி மக்களுக்கும் இன, மத, பேதமின்றி அமைச்சர் றிசாட் செய்து வரும் உதவிகள், வாழ்வியல் நலன்கள் காலத்தால் அழியாதவை. சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் இதுவரை வன்னியைப் பிரதிநிதித்துவப்படுத்திய எந்த அரசியல்வாதியும் செய்யாத மக்கள் சேவையை அமைச்சர் ரிசாட் செய்துள்ளார் என்பதை யாரும் ஆனால் அரசியல் ரீதியாக அமைச்சரால் முன்னுக்கு வந்தவர்கள், அமைச்சரை அரசியல் அரங்கில் இருந்து வீழ்த்தி முன்னுக்கு வரும் நோக்கில், கூச்சலிடும், கடும் போக்காளர்களுக்கு பாதகமான தகவல்களைக் கொடுத்து அவர்களுக்கு சாதகமாகச் செயல்படுவதை வன்னி மக்கள் நன்கு அறிவார்கள்.
அமைச்சர் றிசாட்டின் உதவி பெற்று வாழ்வில் முன்னுக்கு வந்தவர்கள், சந்தர்ப்பவசமாக நன்னிலை அடைந்தவர்கள் அமைச்சரைத் தூற்றியும் அமைச்சரின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்தும் அவர் மீது சேறுபூசும் செய்திகளை வெளியிடுகின்றனர்.
றிசாட் செய்த சேவையின் 100 பங்கு கூடச் செய்ய முடியாத இவர்களின் நோக்கம் என்னவென்பதை வன்னி மாவட்ட மக்களும் மற்றும் வடபுல முஸ்லிம் மக்களும் நன்கு அறிவார்கள். உண்மைக்குப் புறம்பான கற்பனைக் கதைகளையும் திரித்துக் கூறும் செய்திகளையும் நம்பி மோசம் போகும் நிலையில் பொதுமக்கள் இன்று இல்லை. அவர்கள் அரசியல் அறிவு மட்டுமல்ல ஆட்களை மதிப்பிட்டுப் பாடம் புகட்டும் சம நிலை அறிவும் பெற்று அமைச்சர் மீது சேறுபூசும் தவறான, தர்ம நீதி தவறிய ஊடகங்களில் இந்தக் காழ்ப்புணர்வாளர்களின் செய்தி வெளிவருவது அவர்களுக்கு தற்காலிக மகிழ்ச்சியளிக்கலாம். ஆனால் தேர்தலிலே மக்களது தீர்மானம் அவர்களுக்கு பாடம் புகட்டுவதாகவே அமையும்.
வடபுல முஸ்லிம்கள் போல இடம்பெயர்ந்த ஏனைய மக்களுக்கும் மீள்குடியேற்றத்துக்குப் பல நிறுவனங்கள் வீடுகளைக் கட்டிக் கொடுத்தன. குறி;ப்பாக இந்தியா நன்கொடையாக கட்டி வழங்கிய 50 ஆயிரம் வீடுகளில் முஸ்லிம்களுக்கு மிகச் சொற்ப வீடுகளே வழங்கப்பட்டன. அதனால் மிக வறிய குடும்பங்களின் நலன் கருதி அமைச்சர் றிசாட் முஸ்லிம் நாடுகளின் உதவி மூலம் வீடு பெற வழி செய்தார். அதில் என்ன தவறு இருக்கின்றது. வெளிநாட்டுப் பணம் இரகசியமாகப் பெறப்படவில்லை. அரசின் நிதிக்கையாளுகைக்கு அமையவே பெறப்பட்டது.
அமைச்சர் அரசுக்குத் தெரியாமல் வெளிநாட்டு நிதி பெற்றதாகக் குற்றம்சாட்டப்படுவது அப்பட்டமான சோடினைச் செய்தியாகும் முழுப் பொய் ஆகும்.
கட்டப்பட்ட வீடுகள் முசலியில் பிறந்து வளர்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டன. பாகிஸ்தான்காரர்களுக்கும் பங்களாதேஷ் காரர்களுக்கும் வழங்கப்பட்டதாகக் கூறப்படுவது அப்பட்டமான பொய் ஆகும். வீடு பெற்றவர்களின் பிறப்புப் பத்திரத்தைப் பரிசோதித்தால் உண்மையைத் தெரிந்து கொள்ள முடியும். மேலும் வடபுல முஸ்லிம் இடப்பெயர்வு, அதனால் இம்மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் பற்றி அமைச்சர் றிசாத்தைத் தவிர வேறு எந்த முஸ்லிம் அரசியல்வாதியும் அலட்டிக் கொள்ளாமை வடபுல முஸ்லிம்களை மேலும் வேதனைப்படுத்துகின்றது.
மீள்குடியேற்றத்தில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகளைத் தீர்க்க அந்தரங்க சுத்தியுடன் எந்த முஸ்லிம் எம்.பியும் முன் வராமையும் வடபுல முஸ்லிம்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
வில்பத்து பிரச்சினையின் உண்மை. வெளிவரும் போது அகதி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடுபவர்களின் சுயரூபம் அம்பலத்துக்கு வரும்.(ந)