மாலைதீவு முதலீட்டாளர்கள் கிழக்கிற்கு வருகை!

கிழக்கு மாகாணத்தில் தனியார் நிறுவனங்களை அமைத்து அதன் மூலம் கல்வியை தொடர முடியாமல் ஏழ்மை நிலையில் இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நோக்கில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மேற்கொள்ளும் முயற்சியால் மாலை தீவு, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து 12 பேர் கொண்ட குழுவினர் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்தனர்.

குறிப்பிட்ட விஜயத்தின் மாலைதீவு முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் முகம்மட் சக்கீல் தலைமையில் 12 பேர்கொண்ட குழுவினர் கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சின் கேட்போர் கூடத்தில் முதலமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடினர்.

குறித்த முதலீட்டாளர்கள் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாரை போன்ற இடங்களில் தொழிற்பேட்டைகளை நிறுவும் முகமாக பட இடங்களையும் பார்வையிட்டனர்.

கிழக்கு மாகாணத்தில் இருந்து எந்தப்பெண்களும் வெளிநாடுகளுக்குப் பணிப்பெண்களாகச் செல்லக்கூடாது, அதுபோன்று இளைஞர்கள் சாதாரணத் தொழிலாளியாகச் செல்லக்கூடாது. அவர்கள் அங்கு சென்று மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் தொழில் செய்து ஒவ்வொரு மாதமும் பெற்றுக் கொள்ளும் சம்பளத்தினை இலங்கையில் தொழிற்பேட்டைகளை அமைப்பதால் அதில் இருந்து தன் ஊரில், தன்குடும்பத்துடன் இருந்து சந்தோசமாக தொழில் புரிய முடியும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டதற்கிணங்க கிழக்கில் பெருமளவிலான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் 2000 யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கும் ஆடைத் தொழிற்சாலையுடன் பயிற்சி நிலையமும் ஏராவூரில் ஆரம்பித்து வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -