பாசிக்குடா பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்களின் பொருட்கள் பறிமுதல்...




ட்டக்களப்பு மாவட்டத்தின் பாசிக்குடா பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் போது வெளிச்சம் பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறி கடற்படையினர் சனிக்கிழமை இரண்டு படகுகளையும், அதன் பொருட்களையும் கைப்பற்றி கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஆழ்கடலில் மீன்பிடியில் ஈடுபடும் சிறிய படகுகள் ஜெனரேட்டர் பாவித்து வெளிச்சம் ஏற்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது என்று கடற்றொழில் திணைக்களம் அறிவித்து பெற்றிகள் மூலம் வெளிச்சத்தை ஏற்படுத்தலாம் என்று கூறியதற்கிணங்க மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டு வந்த போது கடற்படையினர் பாசிக்குடாவில் உள்ள இரண்டு படகுகளையும்,அதில் உள்ள பொருட்களையும் மீன் பிடியில் ஈடுபட்ட ஐந்து பேரையும் கைது செய்து கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொருட்களை கைப்பற்றிய கடற்றொழில் பரிசோதகர் எம்.எல்.எம்.முர்ஜிஸ் இப் பொருட்களை மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைப்பதாகவும், இம் மீனவர்களது பிரச்சினை தொடர்பாக எதிர்வரும் திங்கள்கிழமை மாவட்டக் காரியாலயத்தில் மீனவர்களுக்கும், மட்டக்களபபு மாவட்ட கடற்றொhழில் உதவி பணிப்பாளருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம் பெற்று தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், கடலில் மீன்பிடியில் ஈடுபடும் போது வெளிச்சம் இல்லாமல் இருப்பது எங்களது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். நாங்கள் வெளிச்சம் இல்லாமல் இருக்கும் போது பெரிய கப்பல்கள் மூலம் நாங்கள் தாக்கப்படலாம் வெளிச்சத்துடன் இருக்கும் போது பெரிய கப்பல்கள் வரும் போது வெளிச்சத்தைக் கண்டு விளகிச் செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது

எனவே நாட்டில் எல்லா இடங்களிலும் வெளிச்சம் போட்டு படகுகள் தொழில் செய்யும் போது பாசிக்குடா கடற்பரப்பில் மட்டும் ஏன் தொழில் செய்ய முடியாமல் உள்ளது என்று தெரியாமல் உள்ளது என்றும், உரிய அதிகாரிகள் இது தொடர்பாக உரிய தீர்வை விரைவில் பெற்றுத்தர வேண்டும் என்றும், இல்லையேல் நாங்கள் வீதியில் இறங்கி தீர்வு கிடைக்கும் வரை பேராடுவோம் என்றும் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -