மர்ஹூம் எம்.ஐ.அன்வர் இஸ்மாயில் அவர்களின் 08 ஆவது ஆண்டு ஞாபகாத்த நிகழ்வுகள்..!

ம்மாந்துறையினை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.ஐ.அன்வர் இஸ்மாயில் அவர்களின் 08 ஆவது ஆண்டு ஞாபகாத்த கத்தமுல் குர்ஆனும், துஆப் பிராத்தனை நிகழ்வும் நேற்று (19) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு சம்மாந்துறை ஜனாதிபதி கலாசார விளையாட்டுக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

அன்வர் இஸ்மாயில் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வை.பீ.சலீம் தலைமையில இந் நிகழ்வு நடை பெற்றது.

இந்நிகழ்வில் மார்க்க சொற்பொழிவினை அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஷ்ஷேய்க் எம்.ஐ.அமீர் (நளீமி) அவர்களும் துஆப் பிரார்த்தனையை சம்மாந்துறை ஜமியத்துல் உலமா சபையின் பிரதித் தலைவர் எம்.ஐ.ஹச்சுமுஹம்மட் (மதனி) செய்து வைத்தார் .

அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த உரையினை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக அரசியல் துறை சிரேஷ;ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எம்.எம்.பாஸில் மற்றும் தமிழ்துறைத் தலைவர் கலாநிதி ரமீஸ் அப்துல்லாஹ் ஆயோர்கள் நிகழ்த்தினர்.

கலாநிதி பாஸில் உரையாற்றுகையில் மர்ஹூம் அன்வர் இஸ்மாயீல் அவர்கள் வெறும் சம்மாந்துறைப் பிரதேசத்துக்கோ, வெறும் அம்பாறை மாவட்டத்துக்கோ, உரித்தான ஒரு அரசியல் தலைவராக மிளிரவில்லை இவர் ஒரு தேசிய பார்வையுடன் கூடிய தேசிய அரசியலை செய்;த தலைவராக நோக்கப்பட்டார்.

எதிர்கால சந்ததியினரைக் கருதில் கொண்டு தூரநோக்கோடு சிந்தித்து செயல்பட்டவர் அவர் கல்வி கற்கின்ற காலம் தொட்டே தாம் சார்ந்த சமூகம் பற்றி அவர்களின் எதிகாலம் பற்றி சிந்தித்தவர்.

அதே போன்றுதான் தனது சட்டக்கல்விக்கான பிரவேசத்தின் போதும் தமது சமூகம் சார் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வெற்றி கண்டவர் சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து தம் சமூகத்துக்காக செயல்பட்டவர்.

அதன் பின்னர் மறைந்த பெரும் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ;ரப் அவர்களின் அரசியல் பாசரையில் புடம் போடப்பட்டு அவருடைய அரசியல் வளர்ச்சிக்கும் செயற்பாட்டுக்கும் பக்கபலமாக இருந்தவர் அவரின் மறைவின் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் அரசியல் தலைவராக செயற்பட்டவர்.

மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களினால் உருவாக்கப்பட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முன்னாள் ஜனாதிபதியிடமிருந்து இரண்டு பீடங்களை கொண்டு வருவதற்கான முயற்சியினை செய்து அதில் ஒன்றான அரபு இஸ்லாமிய பீடத்தை உருவாக்கி அவற்றில் இன்று சுமார் ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்கச் செய்த பெருமையும் அந்தப் பல்கலைக் கழகத்தை எமது தலைவர் கொண்டுவந்த நோக்கத்தையும் உயிர்ப்பித்துக் கொண்டிருக்கச் செய்து கொண்டிருக்கின்ற பேருமையும் மர்ஹூம் அன்வர் இஸ்மாயிலினையே சாரும் எனவும் தெரிவித்தார்.

அபூ -இன்ஷாப் 
(சம்மாந்துறை பிரதான நிருபர்)


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -