நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்த்தன தாக்கல் செய்த பிணை அனுமதி தொடர்பான மனு எதிர்வரும் ஜூலை 3ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்த மனு பரிசீலனை இன்று செய்யப்பட்ட போதே விசாரணை திகதி குறிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தின் போது ஜனாதிபதி செயலகத்தின் 23 வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சஜின் வாஸ் கைது செய்யப்பட்டார்.
மருத்துவ நிலையை கருத்திற்கொண்டே இந்த பிணை மனு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினரின் மருத்துவ அறிக்கையை எதிர்வரும் 3ஆம் திகதி சமர்ப்பிக்க உத்தரவிட்ட கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி, அன்றைய தினம் பிணை தொடர்பில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்.