காணாமல் போன மலேசிய எம்.எச்.370 வாகனம் பிரான்ஸில்....?? (வீடியோ)

பிரான்ஸ் - இந்து சமுத்திர தீவான லா ரீயுனியன் பகுதியில் போயிங் விமானத்தின் பாகம் ஒன்று ஒதுங்கியுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பிரான்ஸ் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பாகம் கடந்த வருடம் விபத்துக்குள்ளான எம்.எச்.370 என்ற மலேசிய வானூர்தி சேவைக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

எனினும் இன்னும் அது உறுதி செய்யப்படவில்லை.

குறித்த விமானம் கடந்த வருடம் மார்ச் மாதம் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கி பயணித்த வேளையில் காணாமல் போய் இருந்தது.

பின்னர் இந்த விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும், அதன் பாகங்கள் எவையும் மீட்கப்பட்டிருக்கவில்லை.

இந்த விமானத்தில் 239 பேர் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேடுதல் பணியில் தொடர்ந்தும் அவுஸ்திரேலியா ஈடுபட்டு வருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -