அகமட் எஸ். முகைடீன்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் அம்பாறையில் இருந்து மருதமுனை வரை வாகனத் தொடர் அணியாக ஊர்வலம் சென்ற அக்கட்சியின் வேட்பாளர்களுக்கு மக்கள் பெரும் வரவேற்பு வழங்கினர்.
இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்ட்டியிடும் வேட்பாளர்களான கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் எஸ்.எம்.முகம்மட் இஸ்மாயில், மைஹோப் நிறுவனத்தின் உரிமையாளர் சித்தீக் நதீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த வாகனத் தொடரணி ஊர்வலத்தில் பயணித்த வேட்பாளர்களுக்கு வீதி ஓரங்களில் நின்ற ஆதவாளர்களினால் மாலை அணிவித்து பாரிய வரவேற்பு வழங்கப்பட்டதோடு வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது. விஷேடமாக சாய்ந்தமருது பிரதேச மக்கள் உச்சாகத்துடன் கூடிய பாரிய வரவேற்பினை வழங்கி வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.