முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்-
வன்னி முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றைச் சற்றுத்திரும்பிப் பார்க்கின் சிலவரலாற்றைப் புரிந்துகொள்ளலாம்.வன்னியின் முதல் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராக மர்ஹூம் றஹீம் அவர்கள் ஐ.தே.சார்பில் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
இதை அடுத்து முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் எஸ்.எஸ்.எம்.அபூபக்கர் அவர்களும்,ஈரோஸ் சார்பில் மர்ஹூம் ஜயூப் அவர்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
அபூபக்கர் இருமறை பா.உ.ஆகத்தெரிவாகி இருந்தார்.இரண்டாம் முறையின்போது. விஞ்ஞானத் தொழினுட்ப பிரதியமைச்சராகவும்,பின்னர் சமூகசேவைப் பிரதியமைச்சராகவும் நியமிக்கபபட்டிருந்தார்.
இவ்வமைச்சுக்களினூடாக வஞ்சி;க்கப்பட்ட வடபுல முஸ்லிம்கட்கு பெரிதாக எதனையும் செய்யமுடியாத கையறுநிலை காணப்பட்டது.இதனால் மனமுடைந்து சனாதிபதிக்கும்,மு.கா.தலைவருக்கும் காரசாரமான கடிதம் ஒன்றினை எழுதினார்.விசேடமாக அப்போதய இலங்கை அதிபரிடம் 200 ஆசிரியர் நியமனத்தைக் கோரியும் அது கிடைக்கவில்லை.
பின்னர் அரசியல் சாணக்கியத்தால் 600ஆசிரியர் நியமனத்தை சமகால அரசியல் தலைவர் சாதித்துக்காட்டினார்.
அடுத்து மர்ஹூம் நூர்தீன் மசூர் அவர்களும்,றிசாத் பதியுதீன் அவர்களும் தெரிவாகினர்.இதில் மசூர் அவர்கட்கு பிரதியமைச்சு வழங்கப்பட்டிருந்தது.அவர் அதன்மூலம் சில அபிவிருத்தித்திட்டங்களையும் செய்து இருந்தமையும் மறக்கமுடியாதவை:
மகிந்த அரசின்போது நியாயமான காரணத்திற்காக றிசாத்பதியுதீன் மு,கா.விலிருந்து வெளியேறினார். இதன்போது. வன்னிச்சரித்திரத்தில பலமான முழுவமைச்சு ( மீள்குடியேற்றமும் புனர்வாழ்வும் )இவருக்குக் கிடைத்தது.இதன் பின்னர் அபிவிருத்திகள் எம்மக்களை எட்டிப்பார்த்தன.அரச நியமனங்களும் கிடைக்கத்தொடங்கின.
மாதிரி மீள்குடியேற்றக் கிராமங்கள் உருவாக்கப்பட்டன.இறுதி யுத்தத்தால் வெளியேற்ற்பட்ட 300000 மக்களை இவரால் குடியேற்ற முடிந்தது;.ஆனால் தனது இன மக்களை துரிதமாக மீள்குடியேற்றும் சாதக சூழ்நிலை அப்போது கிடைக்கவில்லை.திடீரென ஏற்பட்ட அமைச்சரவை இடமாற்றத்தால் நமக்குத் தேவையான அமைச்சு கைமாறியது.
வர்த்தகக்கைத்தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.தனது அமைச்சால் செய்ய முடிந்த சேவைகள் யாவையும் மீள்குடியேற்ற அமைச்சர் போலவே செய்துள்ளார்.இவரின் சாணக்கியத்தாலும் தந்திரோபாயத்தாலும் புதிதாக அரசியலுக்குள் கொண்டுவரப்பட்ட ஹூனைஸ் பாரூக் பிரிந்து சென்றுவிட்டார்.
இவரின் பிரிவால் கட்சிக்கு சிறுபாதிப்பும் ஏற்படப்போவதில்லை.நூர்தீன் மசூர் அவர்களின் வெற்றிடத்திற்கு முத்தலிபாவா பாருக் நியமிக்கப்பட்டார் இவரால் மு.கா.ஊடாக மக்களுக்குப் பெரிதாக எதனையும் செய்யமுடியாமல் போனது.இதனால் வாக்களித்த மக்கள் விரக்தியின் விளிம்புக்கே வந்துவிட்டனர்.
வன்னி;க்கு மொத்தம் 06 பா.உ.கள் இதில்03 தமிழ் உறுப்பினர்கள்,03 முஸ்லிம் உறுப்பினர்கள் என்ற அளவுக்கு முஸ்லிம் அரசியல் வளர்ந்துள்ளது.இந்த 03 என்ற இலக்கை தக்கவைக்க முடியுமா?.....
அதனை எக்கட்சியால் சாதிக்க முடியும்.பெயரளவில் பாராளுமன்றக் கதிரைகளை சூடாக்கும் பிரதிநிதிகள் தேவையா?உரிமைக்காகவும்,இனத்துக்காகவும்,இலங்கை முஸ்லிம்களுக்காகவும் போராடும் குணம் கொண்ட அபிவிருத்திப்பாதையில் இட்டுச்செல்லும் பிரதிநிதிகள் தேவையா ?,,,,,,
இதனைத்தீர்மானிக்க வேண்டியது நீங்கள்தான்.வெறும் வசனங்களாலும்,கட்சிக் கீதங்களாலும், தேர்தல் காலத்தில் மட்டும் வந்து நெருங்கி உறவுகொள்ளும் அரசியல் சக்திகளாலும் கடந்த காலங்களில் நாமடைந்த நன்மைகள் எவை?இனி அடையப் போகும் நன்மைகள் எவை?....யாவும் வெற்றுச்சரங்கள் இதனைச்சரியாக சிந்தியுங்கள்.
உங்கள் சிந்தனைக்குச் சில வினாக்கள்......
1.அரச காணிகளைப் பெற்றுத் தந்தது யார்?
2.வீடமைப்புத் திட்டங்களை பெற்றுத்தந்தது யார?
3.600 ஆசிரிய நியமனங்கள் யாரால் கிடைத்தது.
4.ஆயிரக் கணக்கான அரச நியமனங்களைப் பெற்று;க் கொடுத்தது யார்?
5.புரோக்கர் மூலம் பணம் அறவிடாமல் பதவி தந்தது யார்?
6.எமக்கான அபிவிருத்திகளைப் பெற்றுத்தந்தது யார்?
7.கனவாக இருந்த இணைப்பாளர் பதவிகள்,தவிசாளர் பதவிகள்,பணிப்பாளர் பதவிகளை நனவாக்கியது யார்?
8.பலசேனாக்களுக்கு எதிராக தனியாக நின்று போராடியது யார்?
9. இலங்கை முஸ்லீம்களுக்கு ஒரு அநீதி நடந்தால் முதலில் அதற்கெதிராக களத்தில் குதிப்பது யார்?
10. பலமான மகிந்தவை எதிர்த்து முதலில் வெளியேறிய முஸ்லீம் அமைச்சர் யார்?
11. இலகுவாக மக்களால் சந்திக்க முடிந்த அமைச்சர் யார்?
12.மக்களின் இதயங்களில் வசிப்பதால் தொடர்ச்சியாக வன்னித்தேர்தல்களில் வென்று கொண்டே வருவது யார்?...
13.குறகிய காலத்திற்குள் தேசியத்தலைவராக இனங்காணப்பட்டவர் யார்?
14.இலங்கை முஸ்லி;கள் அனைவராலும் அதிகம் நேசி;க்கப்படும் முஸ்லிம் தலைவர் யார்?
15.முஸ்லிம் அரசியல் ஞானி சேகுவால் இனங்காட்டப்பட்ட முஸ்லிம் அரசியல் தலைவர் யார்?