கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தி

முப்பது நாட்கள் பசித்திருந்து நோன்பு நோற்று புனிதமான பெருநாளைக் கொண்டாடும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைவதுடன், இப்பெருநாள் தினம் இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு சமாதானம், சமத்துவம், சகோதரத்துவம் பொருந்திய ஒன்றாக அமைய வேண்டும் என்று தனது பெருநாள் வாழ்த்துச்செய்தியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.


மேலும் தனது வாழ்த்துச்செய்தியில்:


இத்தினத்தைக் கொண்டாடும் நாம் அடுத்த பெருநாள் வருவதற்கிடையில் வெளிநாடுகளில் பணியாற்றும்/ வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்ல நினைத்துள்ள அனைத்து நம் தாய்மார், சகோதரிகள், மனைவிமார், பிள்ளைகள் அனைவரையும் தடுத்து நம்நாட்டிலேயே தொழில் செய்து தன்குடும்பத்துடன் சந்தோஷமாக தன் வீட்டிலேயே கழிப்பதற்க்கு திடசங்கற்பம்பூணுவோம்.

கடந்த காலங்களில் இலங்கைத் திரு நாட்டில் ஆயுதப் போராட்டம் வெடித்து பல்வேறு வகையிலும் நாடு அழிவுகளையும் பின்னடைவுகளையும் சந்தித்தது. பின்னர் முப்பது வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் சிறுபான்மையினரின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டு- நிரந்தர சமாதானம் ஏற்படுத்தப்படவில்லை.


அதேவேளை கடந்த கால் ஆட்சியில் முஸ்லிம் சமூகம் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டது. முஸ்லிம்களின் சமய, கலாசார உரிமைகள் பாதிக்கப்பட்டதுடன் அவர்களது இருப்புக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டு மக்கள் தமது வாக்குப் பலத்தின் மூலம் ஜனநாயக ரீதியாக ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்தினர். பின்னர் இன்று நாடாளுமன்றத்தேர்தலை எதிர் நோக்கியிருக்கிறோம்.

எனவே எவ்வாறு அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து போராடி ஏகாதிபத்திய ஆட்சியாளர்களை நாட்டில் இருந்து வெளியேற்றினரோ அவ்வாறே அனைத்து இன மக்களும் தமது வாக்குகளைப் பயன்படுத்தி ஜனநாயக் விரோதிகளை தோற்கடிக்க வேண்டும்.

இதன் மூலம் தற்போது மலர்ந்துள்ள நல்லாட்சியை ஸ்திரப்படுத்தி நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படவும் தமிழ், முஸ்லிம் சிறுபான்மைச் சமூகங்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று சமத்துவமாக வாழ்வதற்குமான சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்' என்று முதலமைச்சர் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -