அட்டாளைச்சேனை மன்சூர் எழுதிய எரிகிறது பலஸ்தீனம் ஒருவரலாற்றுப்பார்வை நூல் வெளியீட்டு விழா




பி.எம்.எம்.ஏ.காதர்-

ழுத்தாளர், விமர்சகர், நூலாய்வாளர், கட்டுரையாளர், ஊடகவியலாளர் மற்றும் சேவைக்கால ஆலோசகருமான அட்டாளைச்சேனை மன்சூர் எழுதிய எரிகிறது பலஸ்தீனம் - ஒருவரலாற்றுப் பார்வை எனும் நூல் வெளியீட்டு விழா கடந்த 25.07.2015சனிக்கிழமை மாலை அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் அல்ஹாஜ் அல்ஹாபிழ் கௌரவ என்.எம்.அப்துல்லா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக அறபு மொழிகள் மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி அஷ்சேகு எஸ்.எம்.எம். மஸாஹிர் பிரதம அதிதியாகவும், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ. அஸீஸ், விசேட அதிதிகளாக பிரதேச செயலாளர்களான ஏ.எல்.எம். சலீம், எம்.எம். நௌபல் மற்றும் அம்பாரை மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் அல்ஹாஜ் ஐ.எல். தௌபீக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முதன்நிலை பிரதிகளை கலாபூஷணம் ஏ.ஆர்.ஏ. பிஷ்ர் அல் ஹாபி, சிரேஷ்ட சட்டத்தரணி முன்னாள் முகாவின் செயலளர் எஸ்.எம்.ஏ. கப+ர், அட்டாளைச்சேனை முஸாதிக் பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர் ஏ.எல்.மக்கீன், சிக்னேச்சர் பிராந்திய முகாமையாளர் ஜெலீல் ஆகியோர் பெற்றுக் கொண்டதுடன், நூலின் அறிமுக ஆய்வு விமர்சனத்தினை தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், முன்னாள் பீடாதிபதியுமான கலாநிதி எம்.எஸ்.எம். ஜலால்தீன் நிகழத்தினார். அட்டாளைச்சேனை கலை இலக்கிய வட்டத்தின் தலைவரும், கலாப+ஷணம் ஆசுகவி அன்புடீன் விழாவாளர்களை அறிமுகம் செய்து வரவேற்புரை நிகழ்த்தினார்.

கல்வியாளர்கள், சட்டத்தரணிகள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் தொழில் அதிபர்கள் கலைஞர்கள் என பலர் கலந்துகொண்ட அட்டாளைச்சேனை மன்சூரின் எரிகிறது பலஸ்தீனம் ஒருவரலாற்றுப் பார்வை நூல் அனாசமி வெளியீட்டகத்தின் நான்காவது படைப்பாகவும், அட்டாளைச்சேனை மன்சூரின் நான்காவது படைப்பாகவும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நூல் கடந்தாண்டு பலஸ்தீன காஸாவை மையப்படுத்தி இஸ்ரேலியப் படைகள் தாக்கிய சம்பவத்;தை மூலாதாரமாகக் கொண்டு தேசியப் பத்திரிகையில் தொடராக எழுதிய கட்டுரைகளை சிறிய மாற்றத்துடன் நூலாக்கப்பட்டுள்ளது.

பலஸ்தீன வாழ் மக்களின் நீண்டகாலப் போராட்டத்தின் பின்னணி, இஸ்ரேலின் உருவாக்கம், பலஸ்தீன முஸ்லிம்களுடன் முரண்படுகின்ற இஸ்ரேலியர்களின் போக்கு, விடுதலை வீரர் யசீர் அறபாத்தின் போராட்ட வரலாறு, மத்தியகிழக்கு முஸ்லிம்களினதும் முஸ்லிம் நாடுகளினதும் இன்றைய நிலை, முஸ்லிம்களின் முதல் கிப்லா பைத்துல் முகத்தஸின் இன்றைய நிலை போன்ற பல்வேறு விடயங்களை தெளிபடுத்தும் எரிகிறது பலஸ்தீனம் ஒருவராற்றுப் பார்வை நூல், ஒரு சமூகத்தின் விடியலை நோக்கிய பார்வைக்குள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், ஒரு சமூகத்தின் விடுதலைக்கான போராட்டம் எவ்வாறு செயலுருப்படுகின்றது என்கிற உள்ளார்ந்தமான விடயங்களையும் எரிகிறது பலஸ்தீனம் எனும் நூல் தெட்டத்தெளிவாக்குகின்றது.

நூற்றுக்கணக்கான கல்விக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், சிறுகதைகள், நூல் விமர்சனங்கள் போன்றவற்றை தொடராக தேசிய பத்திரிகைகள், வெப்தளங்கள், சஞ்சிகைகள் போன்றவற்றில் எழுதிவரும் அட்டாளச்சேனை மன்சூர் ஏலவே பதிவுகளின் சங்கம் மற்றும் தரம் ஐந்து மாணவர்களுக்கான மொழியின் செழுமை, புலமையாளர்களுக்கான கட்டுரைத் தொகுப்பு போன்றவற்றினையும் நூலாக்கம் செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -