எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலில், பிரச்சார நடவடிக்கைகளின் போது, புத்தளம் பெரிய பள்ளிவாயலின் பெயரை அபகீர்த்திக்குள்ளாக்கும் வகையில், ஒரு சிலர் செயற்பட்டு வருகின்றமை தொடர்பாக, தமது கண்டனத்தை புத்தளம் பெரிய பள்ளி நிர்வாகம் தெரிவித்துக் கொள்கின்றது.
புத்தளம் பெரிய பள்ளியின் நிர்வாகம் இது வரை எந்தவொரு அரசியல் கட்சிகளுக்கோ, சுயேட்சை குழுக்களுக்கோ ஆதரவையோ அனுமதியையோ வழங்கவில்லை.
மேலும் புத்தளம் பெரிய பள்ளியின் நிழற்படத்துடன் கட்சிகளின் இலட்சினைகளை பயன்படுத்தி வங்குரோத்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை முற்றாக தவிர்ந்து கொள்ளுமாறும் சம்பத்தப்பட்டவர்களை நிர்வாகம் தயவாகக் கேட்டுக்கொள்கின்றது.
அத்தோடு பாராளுமன்ற தலைமைத்துத்தை தெரிவு செய்கின்ற பொறுப்பை அல்லாஹுத்தாலா எமக்களித்த ஓர் அமானிதமாகக்கருதி, ஒவ்வொருவரும் தமது வாக்குரிமையைப் பயன்படுத்தி பொருத்தமானவர்களை பிரதிநிதித்துவத்திற்கு தெரிவு செய்வதற்கு முன்வருமாறு பொதுமக்களை வேண்டிக்கொளகின்றது.
வாக்குரிமை பெற்ற சமலரும் குறித்த தினம் தமது வாக்குச்சாவடியில் வாக்குகளை கட்டாயம் அளிக்குமாறு பொதுமக்களை, புத்தளம் பெரிய பள்ளியின் நிர்வாகம் கேட்டுக்கொள்கின்றது.