இருண்ட யுகத்திற்குள் இலங்கையை மீண்டும் தள்ளி விடுவதனை அனுமதிக்க முடியாது- அப்துர் ரஹ்மான்

திர்வரும் பொதுத்தேர்தலை, கடந்த ஜனாதிபதித் தேர்தலைப் போன்றே, இந்த நாட்டு மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகின்ற ஒரு முக்கியமான தேர்தலாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கருதுகின்றது. இப்பொதுத்தேர்தலின் மூலம் அமையப்போகின்ற பாராளுமன்றமானது, இந்த நாடு மீண்டும் அராஜகத்தில் பயணிக்கப்போகின்றதா? அல்லது நல்லாட்சியில் பயணிக்கப்போகின்றதா? என்பதை தீர்மானிக்கப்பதாக அமையும்" என மட்டக்களப்பு மாவட்ட மு.கா - ந.தே.மு கூட்டணி வேட்பாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் தெரிவித்தார்.

பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுவினை தாக்கல் செய்த பின்னர் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் நடாத்தப்பட்ட முதலாவது பத்திரிகையாளர் மாநாட்டின் போதே (14.07.2015) அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

"நாட்டில் சுமார் கடந்த 5 வருடகாலமாக நிலவிவந்த அராஜக ஆட்சியினை மக்கள் ஒன்றாக இணைந்து, மிகுந்த தியாகங்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் கடந்த ஜனவரி 8ம் திகதி முடிவிற்கு கொண்டு வந்தனர். அன்று ஒரு புதிய இலங்கை, ஒரு நம்பிக்கையான புதிய எதிர்காலம் நம் கண்முன்னே தெரிந்தது. அந்த நம்பிக்கையினை வலுப்படுத்தும் முகமாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியும், ஆட்சியமைத்த புதிய அரசாங்கமும் 100 நாள் வேலைத்திட்டமொன்றினை கொண்டு வந்து, இந்த நாட்டில் நல்லாட்சியினை ஸ்திரப்படுத்தக்கூடிய, அதனை சட்டமாகக் கொண்டு வரக்கூடிய பல வேலைத்திட்டங்களையும் முன்வைத்தனர். ஆனால் மக்கள் நலன்சார்ந்து முன்வைக்கப்பட்ட அத்திட்டங்களில் கனிசமானவற்றை அவர்களால் நிறை வேற்ற முடியவில்லை. இதற்கான மிகப்பிரதானமான காரணம் நல்லாட்சிக்கான ஒரு பாராளுமன்றம் இந்த நாட்டில் இருக்கவில்லை என்பதாகும் .மக்கள் நலனுக்காக ஜனாதிபதியும,; ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான கூட்டணியும் பல வேலைத்திட்டங்களை முன்வைத்தனர். இருந்தாலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளே மக்கள் நலனுக்கு எதிராக தொழிற்பட்டனர். மக்கள் ஆணை மூலம் நல்லாட்சிகென உருவாக்கப்பட்ட பாராளுமன்றத்தினைத் தோற்கடித்து, அவ்வரசாங்கத்தினை அகற்றுவதற்கான நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை மக்கள் பிரதிநிதிகளே கையெழுத்திட்டு வழங்கிய துரதிஸ்டவசமான வரலாற்று நிகழ்வுகளையும், அப்பாராளுமன்றத்தில் 19ம் திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்துவதில் ஏற்பட்ட இழுத்தடிப்புகளையும் நாம் கண்டோம்.

இவ்வாறு கடந்த 6 மாதகாலமாக மிக இறுக்கமான சூழலில் நடைபெற்று வந்த பாராளுமன்றம், வேறு வழியின்றி இன்று அரசாங்கத்தினால் கலைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இக்கலைப்பின் மூலமாக எது எதிர்பார்க்கப்படுகின்றது என்பதுதான் இங்குள்ள முக்கியமான விடயாமாகும். தோற்கடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் அடிவருடிகளாக இருந்தவர்களை மீண்டும் தெரிவு செய்வதற்காக இப்பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கின்றதா? அல்லது பாராளுமன்றத்திலுள்ள மக்கள் விரோத, தேச விரோத நபர்களை அங்கிருந்து விரட்டி ஒர் புதிய நல்லாட்சிக்கு வலு சேர்க்கின்ற பாராளுமன்றத்தை உருவாக்குவதற்காக பாராளுமன்றம் கலைக்கப் பட்டிருக்கின்றதா? ..நல்லாட்சிக்கு வலு சேர்க்கக்கூடிய பாராளுமன்றத்தை உருவாக்குவதற்காகவே அது கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அந்த வகையில் இப்பொதுத் தேர்தலில் பல கட்சிகள் இருந்தாலும், பிரதானமாக இரண்டு அணிகளே உள்ளன. ஓன்று மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடித்து, நல்லாட்சிக்கான ஜனாதிபதியாக மைத்திரி அவர்களைப் பதவியில் அமர்த்திய ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஒரு பெரிய கூட்டணி. இவ்வணி நல்லாட்சியினை வலுப்படுத்தக்கூடிய பாராளுமன்றத்தினை அமைப்பதற்கான மக்கள் ஆணையினைக்கேட்டு களத்திலே நிற்கிறார்கள்.இன்னுமொரு கூட்டணி 62 இலட்சம் மக்கள் எந்த ஜனாதிபதியைத் தோற்கடித்து, வீட்டுக்கு அனுப்பியிருந்தார்களோ, அந்த ஜனாதிபதியை மீண்டும் இந்த பதவிக்கு கொண்டு வந்து, நல்லாட்சியினை இல்லாதொழிப்பதற்காக பாடுபடுகின்ற ஒரு அணி. இவர்கள்தான் இம்முறை மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் தலைமையில் வெற்றிலைச் சின்னத்திலே போட்டியிடுகிறார்கள்.

எனவே இங்கு மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய விடயம்தான், ஜனவரி 8ம் திகதி மிகுந்த தியாகங்கங்களுக்கு மத்தியில், பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாம் உருவாக்கிய அந்த மாற்றத்தை நாம் முன்கொண்டு செல்லப்போகின்றோமா? அதனை மீண்டும் ஸ்திரப்படுத்தப்போகின்றோமா? அல்லது அதற்கு முந்திய 5 வருட காலத்தில் நாம் சந்தித்த இருண்ட ஆட்சியை, மக்கள், சமூக, தேசவிரோத ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கு ஆதரவளிக்கப் போகின்றோமா என்பதில் தெளிவாக இருக்கவேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -