கலாமின் மறைவு : மஹிந்த இரங்கல்

ந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பீ.ஜே. அப்துல் கலாமின் மறைவிற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இரங்கல் வெளியிட்டுள்ளார். இந்திய குடியரசுத் தலைவர் பிராணப் முகர்ஜீக்கு இந்த இரங்கல் செய்தியை அனுப்பி வைத்துள்ளார்.

இந்திய துணைக் கண்டத்தில் உருவாகிய மிக உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரான அப்துல் கலாம் இந்திய அணுத் திட்டத்தின் ஏவுகணை மனிதன் என போற்றப்படுகின்றார். அவர் ஓர் சிறந்த விஞ்ஞானியாவார். சிரேஸ் அரச தலைவராவார். எளிமையான மனிதர். அவரிடம் தெற்காசிய தொடர்பில் நல்ல நோக்கு காணப்பட்டது.

இந்த திட்டங்களில் இலங்கைக்கு முக்கிய பங்கு இருப்பதாக அடிக்கடி கூறி வந்தார். இந்தியாவிற்கு பாரிய சேiயாற்றி அப்துல் கலாம் நாளை எதிர்காலம் இளைஞர்களில் கைகளில் இருப்பதாக திடமாக நம்பினார் என மஹிந்த அனுப்பி வைத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -