க.கிஷாந்தன்-
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் அச்சிடும் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, 29.07.2015 அன்று புதன்கிழமை தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் நுவரெலியா மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ வாக்களார் அட்டைகள் விநியோகிப்பதற்காக 30.07.2015 அன்று வியாழக்கிழமை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்திடம் இருந்து தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
31.07.2015 அன்று வெள்ளிக்கிழமையிலிருந்து நுவரெலியா மாவட்டத்தில் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என்று மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்காக உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் மாவட்டத்திலுள்ள அனைத்து தபால் அலுவலகங்களுக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளன.
இதேவேளை தோட்டத் தொழிலாளர்களுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தோடட்டங்களுக்கு அருகிலுள்ள தபால் அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.