நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சீ.பீ.ரத்நாயக்கவின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனம் பொலிஸாரினாரல் கைது...!

க.கிஷாந்தன்-

க்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சீ.பீ.ரத்நாயக்கவின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனம் ஒன்று 31.07.2015 அன்று முற்பகல் 10.30 மணியளவில் அட்டன் பொலிஸாரினாரல் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த வாகனம் அட்டன் மல்லியப்பு சந்தி அருகில், நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சந்தர்தர்ப்பத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த வாகனத்தில் சீ.பீ.ரத்நாயக்கவின் புதல்வரும் சாரதியும் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வாகனத்தில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களுடன் தொடர்புடைய வேட்பாளர் இல்லாமல் இருந்த காரணத்தினாலேயே வாகனம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், ஸ்டிக்கர்களை அகற்றிய பின்னர் வாகனத்தை மீண்டும் சீ.பீ.ரத்நாயக்கவின் புதல்வரிடம் கையளித்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -