கல்குடா வாக்களப்பெருமக்களே நமது பிரதிநிதி -தேசியக்கட்சியிலா.. அல்லது மீண்டும் படுகுழியிலா

வாழைச்சேனை வை.எம்.பைரூஸ்-

ல் குடா வாழ் முஸ்லிம் மக்களே! இத்திறந்த மடலூடாக மனந்திறந்து உங்களுடன் பேசிக்கொள்வதில் மட்டில்லா மகிழ்ச்சியடைகிறேன்.

இன்று நாம் வாழும் கல்குடா பிரதேசத்தி்ல் கடந்த ஆறு வருடங்களாக ஒரு பாராளு மன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் அல்லலாய்ந்து வருகிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தி்ல் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பிரதேசமான எம் பிரதேசதம் அதிகப்படியான வாக்கு வங்கிகளை தன்னகத்தைக் கொண்டும் பிரதிநிதித்துவம் இழக்கப்படுகின்று என்றால் அதற்கு யார் மூல காரணம் என்பதை நீங்கள் அறிந்திருக்காமல் இல்லை...?

இன்று எம் ஊருக்குள் சில அடிவருடி அரசியல் வாதிகள் தங்களுடைய பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக எம் சமூகத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி,பிரதேச வாதத்தினை தூண்டி முஸ்லிம்களுக்குள் பிரிவினையை உண்டு பண்ணி, அதன் மூலம் தாங்கள் நினைக்கின்ற காரியங்களைச் செய்து முடிக்கலாமென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆகவே நீங்கள் சற்று அவதானமாக நடந்து கொள்ளுங்கள் சகோதரர்களே

எமது கல்குடாவின் பிரதி நிதித்துவம் காலம் காலமாக எமது தேசிய கட்சியினால் மாத்திரமே தக்க வைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் கடைசியாக கடந்த 2010 ஆம் ஆண்டு நடை பெற்ற பொதுத் தேர்தலில்தான் எமது பிரதேசத்தில் இரண்டு பிரிவுகளாக பிரிந்து வேற்பாளர்கள் களம் இறக்கப் பட்டதால் இரண்டு பேருக்கும் கணிசமான வோட்டுக்கள் கிடைக்காததன் காரணமாக எம் அயல் ஊருக்கே எமது பிரதி நிதத்துவத்தை தாரை வார்க்க நேர்ந்தது என்பதை நாம் அறிவோம்

இம் முறையும் எமது அயல் ஊருக்கா நாம் தாரை வார்க்க வேண்டும் சகோதரர்களே...? நிச்சயமாக அதை நானோ நீங்களோ ஏன் எம் ஊரின் ஒரு பொது மகனோ விரும்ப மாட்டார்கள் என்பதை நாம் அறிந்து வைத்து இருக்கிறோம் பிறகு ஏன் நாம் எமது பிளவு பாட்டின் மூலம் எம் பிரதி நிதித்துவத்தை இழக்க வேண்டும்...? சகோதரர்களே

சற்று சிந்தியுங்கள் சகோதரர்களே இன்று தேர்தல் வேற்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ள இரு வேற்பாளர்களிலும் ஒருவரைத்தான் நீ்ங்கள் தெறிவு செய்ய முடியும் அதில் எமது பிரதேசத்தில் கடந்த கால பிரதிநிதியாக இருந்தவரின் நப்பாசைக்காக அவரின் சேவையை எதி்ர் பார்த்து அவருக்கு வாக்களித்து எமது பிரதி நிதித்துவத்தை தக்க வைக்கப் போகிறீர்களா....? அல்லது எமக்கு தேசியத்தில் அடையாளம் எடுத்துத் தந்து எமக்காக சர்வதேசம் வரை குறல் கொடுக்கின்ற எம் தேசிய கட்சியினால் களமிறக்கப்பட்டுள்ள புது முக வேற்பாளருக்கு வாக்களித்து எமது பிரதி நிதித்துவத்தை தக்க வைக்கப் போகிறீர்களா..? அதனையும் பொது மக்களாகிய நீங்களே சற்று சிந்தித்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள்

ஆகவே கடந்த காலங்களைபப் போல் எமது பிரதேசத்துக்குள் பிரிவினைய உண்டு பண்ணிக் கொள்ளாமல் இத் தேர்தலின் மூலம் எமது பிரதிநிதித்துவத்தை ஒற்றுமையாக செயற்பட்டு தக்க வைக்க முயற்சிக்க வேண்டும்

இத் தேர்தலின் மூலம் நாம் எமது பிரதி நிதியை தக்க வைக்க முடியா விட்டால் நிச்சயமாக எம் எதிர் கால சந்ததியினரின் அரசியல் எமது ஊரின் அபிவிருத்தி அனைத்தும் கேள்விக்குறி ஆகிவிடலாம் என்பதே வெளிப்படையான உண்மையாகும் என்பதையும் கூறி முடித்துக் கொள்கிறேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -