அட்டாளைச்சேனை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் “அட்டாளைச்சேனை தாயின் தாலாட்டில் சிகரம் தொட்ட சிகரங்கள் மகிழ்ச்சி விழா” எனும் தொனிப் பொருளில் அட்டாளைச்சேனை மண்ணில் பிறந்து உயர் பதவியிலுள்ளவர்களை பாராட்டி கௌரவிக்கும் மாபெரும் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெறவுள்ளதாக சங்கத்தின் தவிசாளரும் அகில இலங்கை சமாதான நீதவானாகிய எம்.எல்.முஹம்மட் றியாஸ் தெரிவித்தார்.
வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.பி.நூறுல் ஹக் தலைமையில் அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு ஓய்வுபெற்ற சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி யூ.கே.எம்.இஸ்மாயில் பிரதம அதிதியாகவும் மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரீ.எல்.அப்துல் மனாப், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், எம்.எஸ்.உதுமாலெப்பை கௌரவ அதிதிகளாகவும் விஷேட அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா, கணக்காளர் எம்.ஐ.எஸ்.எம்.ஜிப்ரி, ஓய்பெற்ற அதிபர்களான எம்.ஏ.உதுமாலெப்பை, வை.எம்.எஸ்.பாறுக் மௌலானா, யூ.எம்.சஹீட், ஓய்பெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எம்.இப்றாலெப்பை, உதவி கல்விப் பணிப்பாளர் மௌலவி யூ.எம்.நியாஸி, மௌலவி எ.சீ.எம்.வகாபி ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
நாளை (19) அஸர் தொழுகையின் பின்னர் அட்டாளைச்சேனை ஜூம்ஆ பெரிய பள்ளிவாயலில் விஷேட துஆப் பிரார்த்தனை நடாத்தப்பட்ட பின்னர் கௌரவிக்கப்படுகின்ற அட்டாளைச்சேனை தாயின் தாலாட்டில் சிகரம் தொட்ட சிகரங்கள் 120 பேர்களும் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலில் இருந்து இசை வாத்திய குழுவினரால் பிரதான வீதி வழியாக அழைக்கப்பட்டு அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானம் வரை செல்லவுள்ளதாகவும் சங்கத்தின் தவிசாளரும் அகில இலங்கை சமாதான நீதவானாகிய எம்.எல்.முஹம்மட் றியாஸ் மேலும் தெரிவித்தார்.