சம்பந்தன் உட்பட சிலருக்கும் தேர்தல்கள் ஆணையாளர் விஷேட சலூகை..!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட நான்கு வேட்பாளர்களுக்கு, தேர்தல்கள் ஆணையாளர் விசேட சலுகைகளை வழங்கியுள்ளார். அரசியல் அமைப்புப் பேரவையின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கே விசேட வரப்பிரசாதங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ வாகனங்கள், பாதுகாப்பு ஆகியனவற்றை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். தேர்தலில் போட்டியிடும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உள்ளிட்டவர்களைத் தவிர்ந்த ஏனைய வேட்பாளர்களுக்கு பாதுகாப்போ வாகனங்களோ வழங்கப்படவில்லை. எனினும் அரசியல் அமைப்பு பேரவையின் தலைவர், உறுப்பினர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்பட உள்ளது.

பேரவையின் தலைவர் சமல் ராஜபக்ச, உறுப்பினர்களான சம்பந்தன், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் செனவிரட்ன ஆகியோருக்கு பாதுகாப்பு மற்றும் வாகனங்கள் வழங்கப்பட உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -