பி. முஹாஜிரீன்-
அல் மீஸான் சமூக நலன்புரி அமைப்பினால் பாலமுனை 'தானா அல் புஸைரி' ஜூம்ஆப் பள்ளிவாயலுக்கு ஒலி பெருக்கி பொருட் தொகுதிகள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.
இவ் ஒலி பெருக்கி பொருட் தொகுதியினைக் கையளிக்கும் வைபவம் நேற்று வியாழக்கிழமை (30) 'தானா அல் புஸைரி' ஜூம்ஆப் பள்ளிவாயலில் நடைபெற்றது. பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் எஸ். லாஹீர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அல் மீஸான் சமூக நலன்புரி அமைப்பின் நிருவாக சபை உறுப்பினர்கள் கொண்டு இதனை கையளித்தனர்.
கட்டாரில் தொழில் புரியும் பாலமுனைப் பிரதேசத்தவர்களை அங்கத்தவர்களாகக் கொண்டு இயங்கும் அல் மீஸான் சமூக நலன்புரி அமைப்பின் தலைவர் எஸ்.ரி.ஏ. ஹூதைபிடம் பள்ளிவாயல் நிருவாக சபையினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமையவே இவ் ஒலி பெருக்கி வசதிகள் அன்பளிப்புச் செய்யப்பட்டதாக தானா அல் புஸைரி ஜூம்ஆப் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் ஆர். எம். றிஸ்வான் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், ஜூம்ஆப் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் உறுப்பினர் ஆசிரியர் ஏ.எம் ஜெமீல் உட்பட அல் மீஸான் சமூக நலன்புரி அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, அல் மீஸான் சமூக நலன்புரி அமைப்பினால் பாலமுனை 'தானா அல் புஸைரி' ஜூம்ஆப் பள்ளிவாயலுக்கு ரமழான் மாதத்தில் பொது மக்கள் நோன்பு திறப்பதற்கான கஞ்சி விநியோகம் செய்வதற்காக அண்மையில் ரூபா ஒரு இலட்சம் நிதி அன்பளிப்புச் செய்யப்பட்டது. அல் மீஸான் சமூக நலன்புரி அமைப்பின் நிருவாக சபை உறுப்பினரும் முன்னாள் செயலாளருமான எம். பரீட் கலந்து கொண்டு இதற்கான காசோலையினை கையளித்தார்.அல் மீஸான் சமூக நலன்புரி அமைப்பின் அங்கத்தவர்களின் உதவியுடன் சேகரிக்கப்பட்டு இந்நிதி வழங்கட்டது.
மேலும், கடந்த வருடமும் இவ்வாறு ரமழான் மாதத்தில் பொது மக்கள் நோன்பு திறப்பதற்கான கஞ்சி விநியோகம் செய்வதற்காக ரூபா ஒரு இலட்சத்து 30 ஆயிரம் ரூபா நிதி இவ்வமைப்பினால் இவ் ஜூம்ஆப் பள்ளிவாயலுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.