குறிப்பிட்ட பிரதேசத்தில்இ வன விலங்கு பரிபாலன இலகாவிட்கு சொந்தமான காணிகளில் வீடுகள் அமைத்தவர்களுக்கும்இ மரங்களை வெட்டி காடுகளை அழித்தவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காத வனவிலங்கு இலாகாவின் உத்தியோகத்தர்கள்இ மற்றும் சூழலியல் அமைச்சின் உத்தியோகத்தர்களுக்கும் எதிராகவே இன்றைய தினம் (2௦15.௦7.15) தினம் இவ்வழக்கு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
மேலும் இவ்வீடுகளை அமைப்பதற்காக காணிகளை பெற்றுக் கொடுப்பதில் முன்னின்ற அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் அவர்களையும் இ மன்னார் மாவட்ட செயலாளரையும் இவ்வழக்கின் பிரதான குற்றவாளிகளாக குறிப்பிடப் பட்டுள்ளதாக 'சூழலியல் நியாய கேந்திர' த்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹேமந்த விதானகே அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
'வன பரிபாலன இலாகாவிற்கு சொந்தமான காணிகளை விடுவிக்கும் போது பின்பற்றப் படவேண்டிய இந் நாட்டின் சட்ட திட்டங்களை பின் பற்றாது இக்காணிகள் விடுவிக்கப் பட்டுள்ளன. ஆகவே அதற்கெதிராகவே இந்த வழக்கை பதிவு செய்துள்ளோம். என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் குறிப்பிட்ட அமைச்சரையும் இ சிக்கலுக்குள்ளாக்கும் ஒரு சதித்திட்டத்தின் ஆரம்பமாக இந் நிகழ்வு தென்படுவதாக அவதானிகள் கருத்துக் கூறுகின்றார்கள் .