முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை விவாதத்துக்கு வருமாறு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அழைப்பு விடுத்துள்ளார்.
2005 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு நிதியளித்து அதன்மூலம் வடக்கு கிழக்கு மக்களை தேர்தலில் வாக்களிக்கவிடாமல் செய்தமை தொடர்பிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மஹிந்த ராஜபக்ச, தமது சொந்த நலனுக்காக வெள்ளைவேன் கலாசாரத்தை பயன்படுத்தியதாகவும் ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இதற்கிடையில் ஊடகவியலாளர்களின் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை மற்றும் லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டமை ஆகியவற்றுக்கு யார் பொறுப்பு என்பதை மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
எனவே மஹிந்த ராஜபக்ச, ஆகஸ்ட் 17க்கு முன்னர் இது தொடர்பான விடயங்களை வெளிக்கொணர வேண்டும் என்றும் ரணவக்க கோரியுள்ளார்.