சமஷ்டி கொள்கையை ஏற்கவில்லை - ஐ.தே.கட்சி

க்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் மகிந்த சிந்தனையை விட தரம் குறைந்தது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்திருக்கிறது.பிரதி வெளியுறவுத்துறை அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் 60 மாத வேலைத்திட்ட விஞ்ஞாபனத்தில் யதார்த்தம் இருக்கிறது.எனினும் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுவையான கதை மாத்திரமே இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த 20 வருடங்களாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அரச பணியாளர்களை கொண்டே தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டதாக Npஜ.வீ.பியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று 20 வருடங்களின் பின்னர் அந்த கட்சி, கட்சியாக இருந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறது.எனவேதான், தேர்தல் காரியாலயங்களையோ, பதாதைகளையோ காண முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சி அமைத்தவுடன் சமஷ்டி தீர்வு பெற்று கொடுக்கப்படும்.இதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் உறுதியளித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்ததாக மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பிரசாரம் ஒன்றில் உரையாற்றிய அவர் இதன்போது, பாதுகாப்பு, நிதி மற்றும் வெளிநாட்டு சேவை என்பவற்றை தவிர்ந்த ஏனைய அனைத்து துறைகளிலும் அதிகார பகிர்வு வழங்கப்படவுள்ளதாக குற்றம் சுமத்தினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில், சமஷ்டி முறைமையில் செல்வதற்கான வழி வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பிரதான கட்சிகள் தமது நிலைப்பாட்டை வெளியிட வேண்டும் என தேசிய அமைப்புக்களின் ஒன்றிய அழைப்பாளர் குணதாச அமரசேகர செய்தியாளர் சந்திப்பின் போது கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க கருத்து ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் ஏற்கனவே கூறப்பட்டு வந்த சுலோகங்களையே உள்ளடக்கியுள்ளது.

இதனை வைத்து கொண்டு சிலர் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் சுயாட்சியை கோருவதாக கோஷமிடுகின்றனர்.வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் சுயநிர்ணய உரிமை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அந்த வாக்கெடுப்பு வெற்றி பெற போவதில்லை.

அதேநேரம், புனர்வாழ்வு பெற்ற விடுதலை புலிகளுக்கு வேட்பு மனுக்களை கொடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு இணங்கவில்லை போன்ற காரணங்கள் தமது கருத்துக்கு வலுசேர்ப்பதாகவும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சமஷ்டி கொள்கையை ஏற்று கொள்ளவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் அஜீத் பீ பெரோவும் தெரிவித்திருக்கிறார்.தமது கட்சியை பொறுத்தவரையில் ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்கள் பகிரப்படுவதற்கான அனைத்து உறுதி மொழிகளும் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

நாட்டில் பொது கொள்கை ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஒரு நாள் இணைந்து கொள்ளும் என சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தெரிவித்துள்ளார்.ஜனவரி 8 ஆம் திகதி பொது கொள்கை ஒன்றை ஏற்படுத்தும் போது தமிழ் முஸ்லிம் கட்சிகள் ஒன்றாகவே செயற்பட்டன.

எனினும், இந்த பொது கொள்கை விடயத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தனித்து நின்று செயற்பட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்தவரையில் தேசிய அரசாங்கத்தை அமைக்க போவதாக அது தெரிவித்து வருகிறது.

அதனால் அந்த கட்சிக்கு நாடாளுமன்றத்தில் போதுமான ஆசனங்கள் கிடைக்காது என்ற நிலைப்பாடு வெளிப்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதன்போது. அந்த கட்சி வடக்கு கிழக்கில் சுயாட்சியை கோரும் சம்பந்தனுடைய கட்சியுடன் இணைந்தே தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்த போகின்றது என்பதே தெளிவான விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மகிந்த ராஜபக்சவை அடுத்த பிரதம மந்திரியாக வருவதற்கு வாய்ப்பளிக்க போவதில்லை என ஜே.வீ.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இன்று இடம்பெற்ற பிரசார கூட்டத்தின் போது அவர் இந்த கருத்துதை வெளியிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -