சுலைமான் றாபி-
ஸ்ரீ.ல.மு.காங்கிரசின் தேசியப்பட்டியலில் அதன் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகு தாவுதிற்கு இடம் அளிக்கப்படவேண்டுமென்ர கோரிக்கைக்கு சாதகமான நிலை ஏற்ற்பட்டுள்ளதால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மரச்சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரசின் வேட்பாளர் அலிசாஹிர் மௌலானாவிற்கே அதிக விருப்பு வாக்குகள் கிடைத்து பாராளுமன்ற உருப்பினராகக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனது சொந்த ஊரான ஏறாவூரிலும் கல்குடா, காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேசங்களிலும் கணிசமான ஆதரவினைக் கொண்ட அலிசாஹிர் மௌலானாவே இந்த தேர்தலில் மு.கா வில் இருந்து தெரிவுசெய்யப்படுவார்கள் என அரசியல் வட்டாரங்கள் அடித்துக் கூறுகின்றன.
மு.காவின் இந்த வியூக அமைப்பினால் ஏறாவூரில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிப்பர் என நம்பப்படுகின்றது. தங்கள் ஊரிற்ற்கு இவ்வாறான அதிஷ்டம் கிடைத்ததனை இட்டு ஏறாவூரில் மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த பாராளுமன்றத்தேர்தலில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகுதாவுத் இம்முறையும் அமைச்சராகி வருவார் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.