மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி மாணவர்களின் ஏ.எல்.தின விழாவும், நினைவு மலர் வெளியீடும்.




பி.எம்.எம்.ஏ.காதர்-

ருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி மாணவர்களின் ஏ.எல்.தின விழா இன்று (29-07-2015) அதிபர் எஸ்.எம்.எம்.அமீர் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும்,முதல் பொறியியல் துறை பட்டதாரியுமான எம்.ஏ.முகம்மட் இப்திகார் அபூபக்கர்; கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதியாக கல்முனை பிரதேச செயலக திவிநெகும தலைமைப்பீட முகாமையாளரும், ஷம்ஸ் மத்திய கல்லூரி அபிவிருத்தி சபை உறுப்பினருமான ஏ.ஆர்.எம்.சாலிஹ் கலந்து கொண்டார்
கௌரவ அதிதியாக பிரதி அதிபர் எம்.எம்.எம்.முஷர்ரப் மற்றும் அதிதிகளாக பிரதி அதிபர்கள்,உதவி அதிபர்கள்,பகுதித் தலைவர்கள் உள்ளீட்ட ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்த கொண்டனர்.

இங்கு எழுவான் என்ற பெயரில் ஏ.எல்.தின நினைவு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -