பொதுத் தேர்தலில் போட்டியிடாத மற்றும் தேசியப் பட்டியலில் பெயரில்லாதவர்கள் எவருக்கும் எம்.பி. பதவிகள் வழங்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகளால் தேர்தல்கள் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள தேசிய பட்டியலுக்கு மேலதிகமாக எவரையும் எம்.பியாக நியமிக்க முடியாதென்றும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்திருப்பதாவது, ஆனால் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற வேட்பாளர் ஒருவருக்கு தேசியப் பட்டியலில் எம்.பி.பதவி வழங்க முடியும்.
அதேவேளை தேசியப் பட்டியலில் பெயர் உள்ள அரச அதிகாரிகள் கூட்டுத்தாபனத் தலைவர்களுக்கு சேவையிலிருந்து வெளியேறுமாறும் அல்லது விடுமுறையில் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலின் பின்னர் அரசியல் கட்சிகள் தமக்கு கிடைக்கும் தேசியப் பட்டியல் எம்.பி. பதவிகளுக்கு பட்டியலில் பெயர் குறிப்பிடாதவர்களை நியமிக்க முடியாதென்றும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.