மஹிந்த ராஜ­பக்­ ஷ­விடம் பொலிஸார் விசா­ரணை..?

குரு­ணாகல் மாவட்ட ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் வேட்­பாளர் மஹிந்த ராஜ­பக்­ ஷ­விடம் பொலிஸார் விசா­ரணை நடத்தக் கூடிய சாத்­தியம் காணப்­ப­டு­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ராடா நிறு­வன ஊழல் மோச­டிகள் தொட ர்பில் விசா­ரணை நடத்­தப்­ப­டலாம் என பொலிஸ் உயர்­மட்டத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. முன்னாள் பாராளுமன்ற உறுப்­பினர் டிரான் அலஸ் ராடா நிறு­வ­னத்தின் தலை­வ­ராக கட­மை­யாற்­றி­யி­ருந்தார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவின் துறைசார் விட­யங்­களில் ஒன்­றாக இந்த நிறு­வனம் காணப்­பட்­டது. 2004ஆம் ஆண்டு டிசம்­பரில் இடம்­பெற்ற ஆழிப் பேரலை அனர்த்தம் கார­ண­மாக வீடுகள் மற்றும் சொத்­துக்கள் இழந்­த­வர்­க­ளுக்கு நிவா­ர­ணங்­களை வழங்­கு­வதே ராடா நிறு­வ­னத்தின் பிர­தான நோக்­க­மாக காணப்­பட்­டது.

இந்த நிறு­வ­னத்தின் நிதி மோசடி செய்­யப்­பட்­ட­தாகக் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. நிதி மோசடி தொடர்பில் நிறு­வ­னத்தின் பிர­தம கட்­டுப்­பாட்டு அதி­காரி சாலிய விக்­ர­ம­சூ­ரிய பொலிஸ் விசேட விசா­ரணைப் பிரி­வினால் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

டிரான் அலஸ் ராடா நிறு­வ­னத்தின் தலை­வ­ராக கட­மை­யாற்­றிய காலத்தில், சாலிய விக்­ர­ம­சூ­ரிய 169 மில்­லியன் ரூபா பணத்தை மோசடி செய்­துள்­ள­தாகக் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

கைது செய்­யப்பட்ட விக்­ர­ம­சூ­ரிய 50,000 ரூபா ரொக்கம் மற்றும் ஒரு மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான இரண்டு சரீரப் பிணை­களின் அடிப்­ப­டையில் விடு­தலை செய்­யப்­பட்டார். தம்மை கைது செய்­வ­தனை தடுக்கும் நோக்கில் டிரான் அலஸ் உயர் நீதி­மன்றில் அடிப்­படை உரிமை மீறல் மனு­வொன்றை தாக்கல் செய்­தி­ருந்தார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராப­ஜக் ஷவின் உத்­த­ர­விற்கு அமைய திறை­சே­ரி­யி னால் ராடா நிறு­வ­னத்­திற்கு 1959 மில்­லியன் ரூபா வழங்­கப்­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­ப­டு ­கி­றது. ராடா நிறு­வனம் இயங்கி வந்த கால த்தில் அந்த நிறு­வனம் 2431 மில்­லியன் ரூபா செல­விட்­டுள்­ளது.

திரு­கோ­ண­மலை மற்றும் மட்­டக்­க­ளப்பில் வீடு­களை அமைப்­ப­தாக 169 மில்­லியன் ரூபா பணம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட போதிலும் ஒரு வீடு கூட நிர்­மாணிக்­கப்­ப­ட­ வில்லை. இந்தக் கொடுக்கல் வாங்­கல்கள் தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­விடம் விசா­ரணை நடத்­தப்­ப­ட­வுள்­ளதாக தெரிகின்றது.மஹிந்­த­விடம் விசா­ரணை நடத்தாது, சம்பவம் பற்றிய விசாரணைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க முடியாது என உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரி வித்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் மஹிந்த விடம் விசாரணை நடத்தப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -