நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தமது உத்தியோகபூர்வ வாகனத்தை, அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைத்துள்ளார். தேர்தல் பிரசார நடவடிக்கையில் அரச சொத்துக்களை பயன்படுத்தவில்லையென்பதை தெரிவிக்கும் வகையில், இவர் தமது வாகனத்தை ஒப்படைத்துள்ளார்.
தமது இந்த செயலானது ஏனைய அமைச்சர்களுக்கும் முன்மாதிரியாக இருக்குமென நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் காலத்தில் அரச சொத்துக்கள் மற்றும் மனித வள பயன்பாட்டை தவிர்த்துக்கொள்ளுமாறு பிரதமர் ரணில் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் ஆகியோர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தனர்.
அத்துடன், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ வாகனங்களை அவர்கள் தேர்தல் காலத்தில பயன்படுத்துவது தொடர்பில், தெளிவான அறிவித்தல் ஒன்றை வழங்குமாறு, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் அண்மையில் தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.