முதன்மை வேட்பாளர் சமூகமளிக்க வில்லை :குருநாகல் மக்களுக்கு ஒரு நல்ல செய்தியாகும் - அகிலவிராஜ் காரியவசம்

இக்பால் அலி-

ம்முறை விசேட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடக் கூடிய முதன்மை வேட்பாளர் சமூகமளிக்க வில்லை. குறைந்தளவு வேட்பு மனுத்தாக்குதலுக்காவது மாவட்ட முதன்மை வருகை தர வேண்டும். இது குருநாகல் மக்களுக்கு சொல்லுகின்ற ஒரு நல்ல செய்தியாகும். 

இந்தப் போட்டி சுத்தமானவர்களுக்கிடையேயும் அசுத்தமற்றவர்களுக்கிடையே நிலவும் போட்டியாகும் .சுத்தமுடையவர்கள் நல்லாட்சியை வழிநடத்திச் செல்பவர்கள். அசுத்தமான அணியில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவர் அணியிலுள்ள ஏனையவர்களுமாகும். 

 இந்த தேர்தலுக்கு மஹிந்த ராஜபக்ஷ வருகை தந்திருப்பது கடந்த காலத்தில் கடுமையான ஊழல் மோசடிக்கு இலக்கான அதேபோல கஷினோ வியாபாரத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை விடுவிப்பதற்காகத்தான் பிரதமராகச் சரி வந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக வருகை தந்துள்ளார். இது அறிவுள்ள மக்களுக்கு நன்கு விளங்கும் என்று குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலுக்காக குருநாகல் மாவட்ட செயலகத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக் வேட்பு மனுத் தாக்கல் செய்து வருகை தந்த முதன்மை வேட்பாளர் அகிலவிராஜ் ஊடகவிலளார்களுக்கு கருத்துக் கூறும் போதே அவர் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்;

இந்தக் கட்சியில் மூத்த பழுத்த அரசியல்வாதிகளும் ஸ்ரீல்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வருகை தந்த அதிக செல்வாக்குமிக்க அரசியல் வாதியான உஸ் பி;. நாவின்ன. படித்தவர்கள். நல்ல சமூகம் பற்றுள்ளவர்கள் போட்டியிடுகின்றார்கள். 

இவரைப் பற்றிக் கோடிட்டுக் காட்டக் கூடியதாக கடந்த காலங்களில் இந்த நாட்டை சூறையாடி இந்த மக்களுடைய பணத்தை மோசடி செய்துவர்களே இந்த கூட்டமைப்பில் உள்ளனர். இதை பொது மக்கள் தெட்டத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். இந்த மாவட்டத்தில் கால் உடைந்த மக்கள் கை உடைந்த மக்கள், பல குறைபாடுகள் உள்ளவற்றை இங்குள்ள சகல மக்களுக்கும் தெரியும். 

இன்று மஹிந்த ராஜபக்ஷ குருநாகலைக்கு வருகை தந்து தன்னுடைய முழு ஆட்சி காலத்திலும் செய்யாததை வந்து எதைப் பார்க்கப் போகின்றார். தோல்வியுற்ற அவரது அரசியல் எதிர்கால வாழ்வை மேலோங்கச் செய்யவே வருகை தந்துள்ளார்.

நீங்கள் உங்களுடைய டயரியில் எழுதிக் கொள்ளுங்கள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன போட்டியிட்டு முழு நாட்டிலிருந்து தோல்வியடையச் செய்தார். நாங்கள் குருநாகல் மாவட்டத்திலிருந்து தோல்வியடையச் செய்து அவரை அனுப்பி வைப்போம் என்று உறுதியாக கூறிக் கொள்ள விரும்புகின்றோம். அத்துடன் இங்கு ஜனாதிபதிக்கு வதிவிடம் கூட இல்லை. அவர் மீளவும் தோல்வியுற்று தன்னூருக்குப் போய் சேர்வார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -