கல்முனை ஹரீஸின் வெற்றிக்கு முழு ஆதரவு வழங்குவோம்- உலமா கட்சி முபாறக் அப்துல் மஜீட்

டைபெறவிருக்கும் பாராளுமன்றத்தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் பல கட்சிகள் களமிறங்கி ஊரில் கிடைக்கவிருக்கும் பிரதிநிதித்துவத்தையும் கிடைக்காமல் செய்து, அவர்களும் பிரயோசனமடையாது, மற்றவர்களுக்கும் இடமளிக்காது செயல்படுவதனை ஒருபோது ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் கல்முனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீசுக்கு உலமா கட்சி பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக அதன் தலைவர் முபாறக் அப்துல் மஜீட் சற்று முன்னர் இம்போட்மிரருக்குத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துக் கூறுகையில் :

கல்முனையைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் உலமாக் கட்சி தனித்து இயங்கி ஊரில் கிடைக்க விருந்த ஒரு பிரதிநிதியைத் தடுத்து விட்டோம் என்ற பழி எங்கள் கட்சிக்கு கிடைக்காமல் இருப்பதற்க்கும் ஊரின் சேவை நலன் கருதியும் நாங்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீசை ஆதரிக்க தீர்மாணித்துள்ளோம். எனவே அவரின் வெற்றிக்கு முழுமூச்சாகக் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்யவும் தீர்மாணித்துள்ளதாக இம்போட்மிரர் இணையத்தள செய்திப்பிரிவுக்கு உலமாக் கட்சியின் தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீட்  தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -