றியாஸ் இஸ்மாயில்-
நாட்டில் நல்லாட்சி தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதில் மூவின மக்களும் ஓர்மித்த கருத்தில் உள்ளதுடன் மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சி வரக்கூடாது என்பதில் மக்கள் மிகக் கவனத்துடன் இருந்து செயற்படுகின்றனர் அவர் அதிகாரத்திற்கு வந்தால் சிறுபான்மையினர் பலிவாங்கப்படுவர் அவரை எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் ஒரு தடைவ வீட்டுக்கு அனுப்பவேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினரும் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் ஆலோசகருமான எம்.எல்.கலீல் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய முன்னணியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களை ஆதரித்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் ஏற்பாட்டில் நேற்று இரவு (30) எம்.அஸ்மத் தலைமையில் அக்கரைப்பற்று நூறாணியா பள்ளிவாயல் அருகாமையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு அவர் இங்கு தெரிவித்தார்.
அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்,
இரண்டு மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுகின்றது இது வரை காலமும் பெறாத பாராளுமன்ற பிரதிநிதிகளை எமது கட்சி பெறவுள்ளதுடன் குறிப்பாக முஸ்லிம் மக்களின் கடந்த பல வருடங்களான நிறைவேற்ற முடியாத தேவைப்பாடுகளை நிறைவேற்றி பிரதேசங்களுக்கு சமூக ரீதியான அதிகாரங்களை தக்க வைத்துக்கொள்வதற்காக தான் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைப்பதற்கு மட்டக்களப்பு வன்னி ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து பெறப் போகின்ற பாராளுமன்ற ஆசனங்கள் தான் ஆட்சி அமைப்பதற்கு பேரம் பேசும் சக்தியாக இருக்கப் போகின்றது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் தற்போது பாராளுமன்றத் தேர்தலில் களம் இறங்கி இருப்பதற்கான காராணம் முஸ்லிம் காங்கிரஸ் விட்ட பெரிய தவராகும் கடந்த ஊவா மகாண சபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் இவர்களுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு சமாந்திரமான கட்சி என இந்த கட்சியை நினைத்து தன்னுடைய மரச்சின்னத்தையும் விட்டுக் கொடுத்து பொதுச்சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டதன் விளைவு தான் தற்போது இவர்கள் அம்பாறை மாவட்டத்தில் மயில் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதற்கான அடித்தளமாக வழி அமைந்துள்ளது எனக் கூறலாம்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் ஒர் ஆசனத்தையும் பெற முடியாமல் தனது மூக்கை உடைத்து விட்டு இம்முறை சென்று விட்டு இதை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொண்டு இனிவரும் தேர்தல்களில் இவர்களது கட்சி ஏனைய பெரும்பாண்மை கடசியுடன் இணைந்து தேர்தலில் கேட்பதன் ஊடாகதான் தன்னுடைய வாக்குகளை பாதுகாத்துக் கொள்ளாமே தவிர முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் போட்டி போடுவதனால் முஸ்லிம் சமூகத்திற்கு செய்கின்ற துரோகத்தனமே தவிர வேறு ஒன்றுமில்லை அத்துடன் இம்மாவட்த்தில் இந்த கட்சியின் சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் ஒருசிலர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தான்னை அடையாளப்படுத்தி அதிகாரங்களைப் பெற்ற பின்னர் பதவி ஆசையில் கட்சியை காட்டிக் கொடுத்துவிட்டு வெளியில் நின்று கொண்டு மக்கள் மத்தியில் தான் செல்வாக்கு மிக்கவர் என தான்னைத் தானே அடையாளப்படுத்துகின்றனர் இவர்களால் ஒரு போதும் வெள்ள முடியாது இம்மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக களம் இறங்கியுள்ள மூன்று உறுப்பினர்களும் வெற்றி பெறுவதில் எந்த ஐயமில்லை என அவர் மேலும் இங்கு உரையாற்றினார்.