அஸ்ஸலாமு அலைக்கும்,
நினைவிருக்கிறதா உங்களாலால் தான் நாங்கள் நியமன MP பெற்றுக் கொண்டோம். Dr. ஜலால்தீன் பாராளுமன்ற உருப்புரிமையை முதல்வர் உதுமாலெப்பை பெற்றுக்கொள்ள காரணமாக இருந்தார்.
அதுவே எமதூரின் அரசியலின் தொடர்க்க புள்ளியின் முதற்படியாகும்.இந்த வரலாறு எமது இரு ஊரினதும் இணக்கத்துக்கு வித்திட்ட ஆரம்ப நிலையாகும். அதன் பின்னரான இன வன்முறை நிலவிய இருள் சூழ்ந்த காலத்திலும் எங்களோடு தோளோடு தோள் சேர்த்து உதவினீர்கள்.
மறந்துவிடவில்லை. மு. கா எனும் மறைந்த மாமனிதர் பேரியக்கம் சரணகதி அரசியலையும் எமது சமுகத்தை குழு வாக சித்தரித்த போது நாம் தலைமையேற்று வெளியேறிய போது எம்முடன் இணைந்து உங்களை வழிநடத்திய உதுமாலெப்பையும் இணைந்து கொண்டார்.
அன்றிலிருந்து இன்று வரை உங்களுடைய பெரும்பான்மை வாக்குகளை ஒரு போதும் எமக்கு நீங்கள் வழங்கவில்லை. ஆனால் உங்களின் சிறு அளவிலான வாக்குகளால் நாங்களும் பலனடைந்து இருக்கிறோம்.ஆனால் உங்களை எமது சகோதரனாக ஏற்று அயலவனான உமதூருக்கு இரு முறை பெருவாரியான வாக்குகளை வழங்கி மாகாண அமைச்சுடன் பல அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு துணை நின்றோம்.
ஆனால் உமது நிலைப்பாடு எதுவாக இருந்தது தொடர்ச்சியாக உங்களை கேலிக்கூத்தாக்கி MP எனும் கனவை விதைத்தும் போலியான உரிமை கோசத்துக்கும் உங்களை அகப்படுத்திக் கொள்ளவைத்தார்கள்.ஏமாந்து போனீர்கள்.வாரும் என் அயலவனே!
இன்று இப் பொதுத்தேர்தலில் உங்களுக்காக நாம் நீங்கள் கோராமலே தேசியப்பட்டியல் தருகிறோம்.போலியாக அல்ல. நிஜமாகவே பெயர் பட்டியலில் உதுமாலெப்பை என்று கொட்டை எழுத்திலே வந்ததையும் கண்டிருப்பீர்கள். நிஜமான உண்மைகளை உணர்ந்து உண்மையின் பின் செல்வோம்.தேசிய காங்கிரஸ் எனும் தேசிய இயக்கத்தையும் எமது ஊரிண்டினும் கருவூலத்தையும் காப்போம் வாரீர் அயலவனே. .
✍ மனச்சாட்சியுள்ள அக்கரைப்பத்தான்