பிரபல ரகர் வீரரான தாஜூதீனில் கொலையுடன் பல முக்கியஸ்தர்கள் தொடர்பு - புலனாய்வுப்பிரிவு

பிரபல ரகர் வீரரான தாஜூதீனில் கொலையுடன், பல முக்கியஸ்தர்கள் தொடர்புபட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். தாஜூதீன் கொலையுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் புதல்வரான யோசித்தவுக்கு தொடர்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இக்கொலையுடன் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரும் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், கடந்த 2012ஆம் ஆண்டு தாஜூதீன் கொலையுண்டார். விபத்தின் காரணமாகவே அவரது மரணம் சம்பவித்ததாக பொலிஸார் தெரிவித்ததோடு, அது தொடர்பான அத்தனை விடயங்களும் மூடி மறைக்கப்பட்டிருந்தன.

பின் நாட்களில் கிடைத்த சில ஆதாரங்கள் மற்றும் ஆட்சி மாற்றம் ஆகியவற்றையடுத்து, தாஜூதீன் பிறிதொரு இடத்தில் கொலை செய்யப்பட்டு, நாரஹெண்பிட்ட பகுதியில் காரில் வைத்து எரியூட்டப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கடந்த ஆட்சியில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட தாஜூதீனின் மரணம் தொடர்பான விசாரணை, ஆட்சி மாற்றத்தின் பின்னர் மீண்டும் தூசு தட்டி எடுக்கப்பட்டு தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.ச
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -