நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகம் இழைத்ததில்லை - மஹிந்த

நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகம் இழைத்ததில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாதிருந்த காரணத்தினால் எனக்கு எதிராக சேறு பூசப்பட்டதுடன் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

சஜித் பிரேமதாச இப்போது கூச்சலிடுகின்றார்.

புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கியது நினைவில்லையா? 600 பொலிஸ் உத்தியோகத்தர் கொலை செய்யப்பட்டமை மறந்து விட்டதா என கேள்வி எழுப்பியுள்ளார்.கண்ணாடி முன்னால் சென்று பார்த்தால் யார் துரோகி என்பது தெரியும்.
தேயிலை, நெல் மற்றும் இறப்பரின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது, இவர்கள் ஐந்து ஆண்டகள் பதவி வகித்தால் அவ்வளவுதான்.நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடுவதனை தடுத்து நிறுத்திய என்னை அவதூறு செய்கின்றார்கள்.

புலிகளினால் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் கிராமங்களுக்கு மாதமொன்றுக்கு எத்தனை வந்தன என்பது நினைவு உண்டா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சூழ்ச்சி செய்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -