ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் செயற்பாடுகளின் பிரதிபலன் காரணமாக இலங்கை தற்போது காவற்துறை நாடாக மாறியுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவான கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் தற்போதைய அரசாங்கத்தின் பல்வேறு தொந்தரவுகளை எதிர்நோக்கி வருகின்றனர். காவற்துறையின் நிதி மோசடி விசாரணைப் பிரிவு மற்றும் இலஞ்ச ஆணைக்குழு ஆகியவற்றின் நடவடிக்கைகள் காவற்துறை நாடு என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
அத்துடன் நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்கள், தான் உட்பட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வாட்டி வதைத்து வருகிறது.
முன்னாள் அரசாங்கத்துடன் தொடர்பு வைத்திருந்தமை குறித்து காவற்துறையினர் பல தொழிலதிபர்களிடமும் விசரணைகளை நடத்தியுள்ளதாக கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.