யாழ் New Science World பிரபல ஆசியர்களைக்கொண்டு Dr.வரதராஜன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் காரைதீவு '"TRAKS" (Tsunami Rehabilitation Association Karaitivu Srilanka) அமைப்பின் பூரண அனுசரனையுடன் காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரியின் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரின் ஏற்பாட்டில் இம்முறை உயர்தர பரிட்சைக்கு தோற்றும் கணித விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான இருநாள் கல்வி கருத்தரங்கு சிறப்பாக காரைதீவில் இடம்பெற்றது.
இவ் கல்விக்கருத்தரங்குகானது யாழ் பௌதிகவியல் புகழ் திரு.குமரன், திரு.குகன் மற்றும் இரசாயணவியல் புகழ் திரு.டயஸ், திரு.சிவகுமார் உயிரியல் பிரபல ஆசிரியர் திரு.பொன்திவாகரன் போன்ற ஆசியர்களை உள்ளடக்கியதான ஆசிரியர் குழாமினரால் இரு நாட்கள் தொடர்ச்சியான கற்பித்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
அது மட்டுமல்லாது தற்பொழுது உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு வெளியான உயர்தர பரிட்சை முடிவுகளில் அகில இலங்கை ரீதியில் கணித பிரிவில் 5ம் நிலைபெற்ற மாணவன் மற்றும் சிறப்பு பெறுபேறு பெற்ற மாணவர்களால் தமது கற்றல் அனுபவங்கள் மற்றும் அறிவுரை ஆலோசனைகள் என்பனவும் கூறப்பட்டது.
மேலும் வருகை தந்த ஆசிரியர் குழாமினர் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்று மாணவர்களின் கல்வி மேம்பாட்டை அதிகரிக்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொண்டதோடு அடுத்தவருடம் பரிட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கு New Science World கல்வியகத்தால் விஷேட மாதாந்த பரிட்சைகளும் நடாத்தப்பட்வுள்ளதாகவும் ஆசிரியர் குழாமினர் மாணவர்களிடம் கூறினர்.