நல்லாட்சி கூட்டணிக்கு ஒத்துழைப்பு வழங்க சந்திரிக்கா திட்டம்...!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சிவில் அமைப்புகளுடன் இணைந்து நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்க திட்டமிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கம்பஹா மாவட்டத்தை மையமாக கொண்டு தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தற்போது வெளிநாட்டில் தங்கியிருப்பதுடன் ஓரிரு தினங்களில் அவர் இலங்கை திரும்புவார் என கூறப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதால், அதிருப்தியடைந்துள்ள சந்திரிக்கா, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டணிக்கு இம்முறை ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -