கொட்டாஞ்சேனை துப்பாக்கி பிரயோகம் விவகாரம் : சந்தேகத்திற்கு உரியவரின் கார் கண்டுபிடிப்பு

கொட்டாஞ்சேனையில் அமைச்சர் ரவி கருணாநாயக்காவின், ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்கு உரியவர்கள் பயணித்ததாகக் சந்தேகிக்கப்படும் 'ஹய் பிரீட்" ரக சிற்றூர்ந்து ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சிற்றூர்ந்து, புளுமண்டல் வீடமைப்பு தொகுதிக்கு அருகில் இருந்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த சிற்றூர்ந்தில் இருந்து, ரி56 ரக ரவை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ரூவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் 11.30 அளவில் கொட்டாஞ்சேனை - புனித பெனடிக் விளையாட்டரங்கிற்கு அருகாமையில் துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக பெண் ஒருவர் பலியானதுடன், மேலும் 13 பேர் காயமடைந்தனர்.

வாகன இலக்கத்தகடு அற்ற 'ஹய் பிரீட்" ரக சிற்றூர்தி பயணித்த நான்கு பேர் ரி56 ரக துப்பாக்கியினை பயன்படுத்தி இந்த தாக்குதலை மேற்கொண்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த 14 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், பெண் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது, உயிரிழந்துள்ளதாக மருத்துவமனையில் பணிப்பாளர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த சிலர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -