தேர்தல் களத்தில் ஒவ்வொரு நாளும் பல எதிர்பாராத புதுப்பது சர்ச்சைகளும், அறிவிப்புகளும் வந்துகொண்டே இருக்கின்றது.
இதில் மக்களின் பங்களிப்பு இல்லாத போதும் அரசியல் பிரமுகர்களின் துடிப்பும், பதட்டமும் எப்படியாவது பெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற வெறித்தன்மையும், சாதாரண மக்களை ஆச்சரியத்திலும், திகைப்பிலும் ஆழ்த்திக் கொண்டேயிருக்கின்றது.
இன்னும் இரண்டு வாரங்களே தேர்தல் பிரச்சாரங்களுக்காண கால நேரமாக இருக்கின்ற நிலையில் பெரும்பான்மை கட்சிகளும் அதன் அரசியல் முக்கியஸ்தர்களும் இரவு பகலாக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்கின்றார்கள்.
அதேவேளை இந்த பிரச்சார வெளிப்பாடுகள் ஏதோ கடும் போட்டி நடப்பது போன்ற மாயையான விதத்தில் வெளிப்பாடுகளை காணமுடிகின்றது.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைக்க சூறாவளி பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகின்றார்.
அதேபோல, மகிந்த ராஜபக்ச அவர்களும் பல்வேறு தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றார். அதே வேகத்தில் மக்கள் விடுதலை முன்னணியும் தென்பகுதியில் பிரச்சாரத்தினை நடாத்தி வருகின்றனர்.
அதிகப்படியான ஆசனங்களை சிங்களம் பெற்றுக்கொள்ளும் பகுதியாக தென்பகுதியே காணப்படுகின்றது. வடக்கு கிழக்கினை பொறுத்தவரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிக ஆசனங்களை பெறும் சூழல் காணப்படுகிள்றது.
இந்த தென் பகுதி அரசியல்வாதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எவ்வளவு ஆசனத்தினை குறைக்க முடியுமோ அதை எந்த வழியில் செய்து தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை தமக்கு சாதகமான முறையில் பயன்படுத்தும் வேலைகளையும் செய்து வருகின்மை மறுக்க முடியாது.
இந்த வகையில் கடந்த 30ம் திகதி மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுரகுமார திசாநாயக்க மொரட்டுவையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் குறிப்பிட்ட முக்கியமான விடயத்தினை நாம் இங்கே குறிப்பிட வேண்டியது அவசியமாகும்.
மகிந்த ராஜபக்ச தனது தேர்தல் பிரச்சாரத்தில் கடந்த சில நாட்களாகவே இனவாத்தினை தூண்டும் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார் என சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நாட்டில் இனவாதத்தினை தூண்டக் கூடிய வகையில் சிங்கள இளஞர்களை தூண்டி வருவதாகவும், சிங்கள இளஞர்களை எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்வதாகவும், கேட்டுக்கொண்டமை ஒரு முக்கியமான விடயமாகும்.
அதே நேரம் இதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 30ம் திகதி மகிந்த ராஜபக்ஸ அவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றும் போது இந்த நாட்டில் மீண்டும் குண்டுகள் வெடிக்கவும், சிங்கள மக்களின் உடல்கள் சிதரவும் இடமளிக்க கூடாது எனவும், யுத்தம் என்றால் யுத்தம் செய்ய தயார் என்றும் சிங்கள சாதாரண பொது மக்கள் முன் தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பட்டுள்ளார்.
இந்த விடயங்களை நாம் உற்று நோக்குகின்ற பொழுது அவர் கூட்டங்களில் உணர்ச்சி வசப்பட்டு எதிர்காலத்தில் சிங்கள இளஞர்கள் வேலை செய்யாது விட்டாலும் மகிந்தவின் அரசின் உதவிகள் மூலம் பல வரப்பிரசாதங்களை பெற்று சிறப்பாக வாழலாம் என்பது போல் ஒரு மாயையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
திருமணம் செய்யவிருக்கும் இளஞர்களைக் கூட, திருமணம் செய்ய வேண்டாம் என்றும் அவருக்கு வாக்களித்து வெற்றியடைய செய்த பின் திருமணம் செய்தால் 2 லட்சம் ரூபாய் பணமும் வீடும் வழங்கப் போவதாக குறிப்பிடுகின்றார்.
பொதுவாக தற்பொழுது மகிந்த உணர்ச்சி வசப்பட்டு பேசுவதன் மூலம் சிங்கள மக்களை இனவாத முறையில் கவர்ந்து வெற்றி பெற தனது கடைசி ஆயுதமாக அவர் ஆட்சியில் அவருக்கு உதவிய இனவாதம் எனப்படும் கடைசி ஆயுதத்தினை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருகின்றார்.
அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் பிரச்சாரங்களில் இதுவரை ஈடுபடாத போதிலும் கடந்த வாரம், அவரின் வடபகுதி விஜயம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் அங்கஜன் வீட்டில் காணாமல் போனவர்களின் உறவுகளை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நம்மை சற்று சிந்திக்க வைத்துள்ளது.
இது ஒரு மறைமுகமான தேர்தல் பிரச்சாரமாகவே எண்ணத் தோன்றுகின்றது. காரணம் தென்பகுதியில் உள்ள பெரும்பான்மை மக்கள் இரண்டு பெரும்பான்மை கட்சிகளுக்கு வாக்களிக்கின்ற போதும் வடபகுதி மக்கள் தமிழ் தலைமைகளுக்கு வாக்களிக்கும் என்பதால் அங்கும் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் மறைமுகமான திட்டமாக ஏன் இது இருக்ககூடாது என எண்ணத் தோன்றுகின்றது.
இதை தமிழ் தலைமைகள் எப்படி எடுத்துக்கொண்டாலும் எம்மை பொறுத்தவரை சந்தேகமே மேலோங்கியுள்ளது.
எது எப்படியிருப்பினும் மகிந்த ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி என்ற வரப்பிரசாதத்துடன் சகல இன மக்களின் வரியின் மூலம் சுகத்தை அனுபவித்துக்கொண்டு மக்களையும் நாட்டையும் இன ரீதியாக, மத ரீதியாகவும் பிரித்து தனது ஆட்சியினை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்.
இது இந்த மகிந்தவிற்கு கை கொடுக்குமா? அல்லது அவரை அது படும் பாதாளத்தில் தள்ளி விடுமா? என்பது வரும் ஆகஸ்ட் 17ம் திகதி மக்களின் தீர்ப்பில் தங்கியுள்ளது.
தோல்வியினை தழுவினால் இவரை ஐ.(யோ)ஓ. மகிந்த என மக்கள் அழைப்பார்கள்.
அத்தோடு அவருடன் கைக்கோர்த்திருக்கும் எம் இன அரசியல்வாவதிகளையும் ஐ.(யோ)ஓ. என்ற முதலெழுத்துடனே அவர்களின் பெயர்களையிட்டு அழைக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம்.