ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த முன்னால் ஜனாதிபதி மகிந்த அரசியலை விட்டு ஒதுங்கிவாழ்வதை நாட்டு மக்கள் விரும்பினாலும் தொடர்ந்தும் பதவியிலிருந்து தன்னையும் தன் சகாக்களையும் பாதுகாக்க பாரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் நடக்க இருக்கும் பொதுத்தேர்தல் ஜனநாயகத்தை தூக்கி உயர்த்தி இனவாதியை ஓரங்கட்டும் முயற்சியில் நாம் முற்றுமுழுதாக பணியாற்ற வேண்டும்.
ஆனால் நம் சமூகத்தார் மரமா மயிலா வெல்லப்போவது? என்ற தலைப்பில் வாதப்பிரதிவாதத்தில் ஈடுபட்டு குழு, கட்சி வாதத்தை தோற்றுவித்திருப்பதை காணும்போது கவலையாக இருக்கின்றது.
இந்த பொதுத்தேர்தலை மிகமுக்கியமான ஒரு சந்தர்ப்பமாக பாவித்து இனவாதிகளை ஓரங்கட்டும் பணியை மும்முரப்படுத்துவோம் முன்வாருங்கள்.
வெற்றி நிச்சயம்
மாற்றங்கள் தேவை
இஸ்ஸதீன் றிழ்வான்