அரசியலை கைவிடப் போவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார். வேட்பு மனு கிடைக்காத காரணத்திற்காக நான் அரசியலை கைவிடப் போவதில்லை.
கட்சியை விட்டு விலகிக் கொள்ள போவதுமில்லை.
நான் இன்னமும் இளைஞனாகவே இருக்கின்றேன் இன்னமும் மக்களுக்கு நிறைவே சேவைகளை செய்ய முடியும்.
கொழும்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டு முதலாம் இடத்தைப் பெற்றுக் கொள்வேன் என்ற அச்சம் கொண்ட சிலரின் சூழ்ச்சியினால் வேட்பு மனு கிடைக்கவில்லை.
எனினும் நான் அரசியலை விட்டு விலகப் போவதில்லை என துமிந்த சில்வா சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.