ஸ்ரீசாந்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்ட தடை அறிவிப்பு!

ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்க முடியாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் இருந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோரை சமீபத்தில் டெல்லி நீதிமன்றம் விடுவித்தது.

ஆனாலும் இவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை தளர்த்திக்கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்தது.

இதற்கிடையே, ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கி, அவர் மீண்டும் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று கேரள கிரிக்கெட் சங்கம், இந்திய கிரிக்கெட் சங்கத்திற்கு கோரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் ஆயுட்கால தடையை நீக்கும் எண்ணம் இல்லை என்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெளிவுப்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் செயலாளர் அனுராக் தாகூர் நேற்று கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு வீரர்களுக்கு விதித்த தடை தொடரும்.

ஒழுங்கு நடவடிக்கையில் மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் வேறு. கிரிமினல் வழக்குகளில் கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் வேறு. தடை விதிப்பு என்பது மேற்கண்ட வீரர்களின் முந்தைய ஒழுங்கீன நடத்தைகளின்படி அதாவது ஊழல் தடுப்பு குழுவினர் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டவையாகும்.

எனவே இவர்கள் மீதான தடை நீடிக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -