ஐ.தே.க வேட்பு மனுவில் மோசடி றிஸ்வி ஜவஹர்ஷா ஏமாற்றப்பட்டதின் பின்னனி என்ன?

ரிம்ஸி ஜலீல்-

லங்கை அரசியலில் இன்றைக்கு ஒரு திருப்பத்தை நாம் பார்த்துக் கொண்டுவருகின்றோம் இத்தனைக்கும் ஒரு ஆட்சி மாற்றம்தான் காரணம் என்றுமக்கள் சிந்திக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து இன்றைய நாள் வரைக்கும் முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பு ஒவ்வொரு மாகணத்திலும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

குறிப்பாக குருநாகல் மாவட்டத்தில் 3க்கும் அதிகமான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொள்வதுதான் அதில் முக்கிய நோக்கமாகக் காணப்பட்டது இருந்தாலும் இன்றைக்கு அந்த எதிர்பார்ப்பை சீர்குலைக்கும் ஒரு வேலையை ஐக்கிய தேசிய கட்சி செய்கின்றதை நினைக்கும் போது இன்று ஒவ்வொரு முஸ்லிம் மக்களும் சிந்திக்க வேண்டிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுக் காணப்படுகின்றார்கள்.

அப்படிப் பட்ட ஒரு நிகழ்வுதான் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது அதுதான் அனைத்து மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த குருநாகல் மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவம் இந்தப் பிரதிநிதித்துவத்தை 3 ஆக உயர்தித் தறுவதாக வாக்களித்திருந்த்து ஐக்கிய தேசிய கட்சி இன்றைக்கு ஒரு
பிரதிநிதித்துவத்தை மாத்திரம் வழங்கியிருக்கின்றது.

இதில் என்ன வில்லங்கம் என்றால் முஸ்லம் காங்ரஸ் சார்பில் முதன் முதலில் றிஸ்வி ஜவஹர்ஷா போட்டியிடுவதற்க்கான் சகல ஏற்ப்பாடுகளையும் செய்து தருவதாக ஐக்கிய தேசிய கட்சி முஸ்லிம் காங்ரஸின் தலைவர் ரவூப் ஹகீமிடம் வாக்களித்திருந்தார்.

இதற்கு இனங்க ஐக்கிய தேசிய கட்சி சார்பில் றிஸ்வி ஜவஹர்ஷா போட்டியிடுவதற்க்கான வேட்பு மனுவை முதன் முதலாக 11ம் திகதி தாக்கல் செய்து விட்டு வந்த பின்னர் அவரின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் அகில
விராஜ் காரியவசம் அவர்களால் நீக்கப் பட்டு (டிபெக்ஸ் செய்யப்பட்டு ) அதற்கு பதிலாக அனுராதபுரம் கலாவெவ பிரதேசத்தை சேர்ந்த சாபி எனும்வைத்தியரின் பெயர் சேர்க்கப்பட்ட ஒரு விடயம் நடைபெற்றுள்ளது.

அதாவது வைத்தியர் சாபி அவர்களை நேற்று இரவு 3 மணியலவில் அகில விராஜ் காரியவசம் அழைத்துச் சென்று வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட இடத்தை (டிபெக்ஸ்) செய்து அழித்துவிட்டு ரிஷாத் பதியுதீனின் கட்சி சார்பாக வைத்தியர் சாபியை கையெப்பமிடச் செய்து அவரை அந்த இடத்தில் அமர்த்துவதற்க்கான் வேலைகளை முன்னால் கல்வி அமைச்சர் அகில விராஜ்
காரியவசம் செய்துள்ளார்.

இந்த செயலால் அகில விராஜூக்கு என்ன இலாபம்...???

கடந்த காலங்களில் முஸ்லிம்களின் அதிகமான வாக்குகள் குருநாகல் மாவட்டம் சார்பாக அகிலவுக்கு சென்ற ஒரு விடயம் பரவலாகப் பேசப்பட்டது. அவ்வாறு மீண்டும் முஸ்லிம் மக்களின் வாக்குளைப் பெற்றுக் கொள்வதற்க்கான ஒரு வேலையை செய்வதற்கான் ஒரு திட்டமாக இதனை அவர் செய்துள்ளார்.

அதாவது சட்டத்தரனி றிஸ்வி ஜவஹர்ஷாவை அந்த இடத்தில் வைத்தால் அதனை செய்ய முடியாது ஏன் என்றால் முஸ்லிம்களுக்கு பல வேலைகளை செய்து தறுமாரு கேட்டும் குறிப்பாக (முஸ்லிம் பாடசாலைகளுக்கான் ஆசிரியர் நியமனம், பாடசாலைகள் அபிவிருத்தி விடயங்கள் ) அது தட்டிக் கழிக்கப்பட்டுள்ள விடயம் றிஸ்வி ஜவஹர்ஷா அவர்களுக்கு நன்கு தெரியும் என்கின்ற விடயம் அகிலவுக்குத் தெரிந்திருக்கின்றது அதனால் அந்த வாக்குகளை அகிலவினால் பெற்றுக் கொள்ள முடியாது போகும் என்ற நம்பிக்கையே அகிலவின் இந்த துறோக செயலுக்கு காரணம் என்கின்ற விடயத்தை றிஸ்வி ஜவஹர்ஷா அவர்கள் பலவிடுத்தம் மக்களுக்கு எடுத்துக் கூறி இருக்கின்றார்.

இருந்தாலும் இந்த துரோகச் செயலை செய்த அகில விராஜ் காரிய வசம் அவர்கள் இன்றைக்கு முஸ்லிம் மக்களை ஏமாற்றும் ஒரு வேலையை செய்து
கொண்டிருக்கின்றார் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்தும் ஒரு செய்தியாக
இந்த செய்தி அமைய வேண்டும் என்பதற்க்காக மட்டுமே இந்த கட்டுரை எழுதப்படுகின்றது இதன் மூலம் குருநாகல் மாவட்ட முஸ்லிம் மக்களின் நம்பிக்கை வீணாகி விடக்கூடாது என்கின்ற ஒரு உறுதிப் பாட்டுடைய செய்தியையும் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -