மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவிக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது.
காணி மோசடி தொடர்பில் நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவு பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
பின்னர் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணைக்கு அமைய இன்று இருவரும் ஆஜரான போது பிணையில் விடுதலை செய்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.