பொத்துவில் மக்களுடன் ரஹ்மத் மன்சூர்...




ன்று மாலை பொத்துவிலுக்கு விஜையம் செய்த நீர்வழங்கள் வடிகாலமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரின் இணைப்புச் செயலாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமாகிய  ரஹ்மத் மன்சூர் அங்கு பொதுமக்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

பொத்துவில் பிரதேச சபை முன்னாள் தவிசாளரும், தேர்தல் குழுவின் தலைவருமான எம்.எஸ்.வாசித் தலைமையில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது பொத்துவில் தேர்தல் களநிலவரம் பற்றி கேட்டறிந்ததுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெற்றிக்காகவும், இம்முறை அம்பாரை மாவட்டத்தில் களமிறங்கியுள்ள மூன்று வேட்பாளர்களையும் ஆதரிப்பது சம்மந்தமாகவும் விரிவாக கலந்துரையாடினர்.

இந்நிகழ்வில் பொத்துவில் பொதுமக்கள், கல்விமான்கள், உயர் அதிகாரிகள், உலமாக்கள், இளைஞர்கள் என்று பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -